• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-11 16:35:59    
யுவான் மிங் யுவான் பூங்கா

cri

யுவான் மிங் யுவான் பூங்கா, பெய்ஜிங்கின் ஹாய் தியான் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது, கோடைக்கால மாளிகைக்கு அருகில், இருக்கிறது. இது, 1709ம் ஆண்டில், கட்டியமைக்கப்படத் துவங்கியது. 150க்கு மேற்பட்ட ஆண்டுகளில், சிங் வம்சகாலத்தின் பேரரசர்கள் கட்டியமைத்த ஒரு பெரிய அரசக் குடும்ப அரண்மனையாகும்.

வரலாற்றில், யுவான் மிங் யுவான், Chang Chun யுவான், வான் Chun யுவான் ஆகிய மூன்று பூங்காக்களால் யுவான் மிங் யுவான் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று பூங்காக்கள், ஒன்றோடு ஒன்று இணைத்து, யுவான் மிங் யுவான் என கூட்டாக அழைக்கப்படுகின்றன. இதன் மொத்த பரப்பளவு, சுமார் 350 ஹெக்டர் ஆகும். Yong Zheng, Qian Long, Jia Qing, Dao Guang, Xian Feng ஆகிய ஐந்து பேரரசர்கள், நீண்டகாலமாக, இங்கு தங்கி, விளையாடி மகிழ்ந்தனர். அத்துடன், அவர்கள், இங்கு அரசியல் கூட்டம் நடத்தி, அரசியல் விவாரங்களைக் கையாண்டனர். இந்தப் பூங்கா, அப்பொழுது, அரண்மனையுடன், முழு நாட்டின் அரசியல் மையமாகக் கூட்டாக அமைந்திருந்தது. அது, சிங் வம்சகாலத்தின் பேரரசர்களால் Yu Yuan என அழைக்கப்பட்டது.

அங்குள்ள தோட்டக் கலை காட்சிகள், முழுப் பூங்காவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 200 ஹெக்டர் நிலப்பரப்பு வகித்தது. புகழ்பெற்ற யுவான் மிங் யுவான் 40 காட்சிகள், Zi Bi Shan Fang, Zao Yuan, Ruo Fan Zhi Ge, Wen Yuan Ge முதலிய இடங்கள், இப்பூங்காவின் முக்கிய தோட்டக் கலை காட்சிகள் ஆகும். அப்பொழுது, 600க்கு மேற்பட்ட முக்கிய தோட்டக் கலைக் கட்டிடங்கள் இருந்தன. சீனாவிலும் வெளிநாடுகளிலும், அன்றும் இன்றும், இது, அரசக் குடும்பத் தோட்டங்களில் முதலிடம் வகித்து வருகிறது. பத்தாயிரம் பூங்காக்களிலுள்ள பூங்கா என யுவான் மிங் யுவான் புகழ்பெற்றுள்ளது.

1860ம் ஆண்டு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வல்லரசுப் படைகள், யுவான் மிங் யுவான் பூங்காவை தீ மூட்டி எரித்தன. ஒரு புகழ்பெற்ற பூங்கா, அப்போது, ஒரு இடிபாடாக மாறியது. நவ சீனா நிறுவப்பட்ட பின், பல்லாண்டு கால முயற்சியில், குறிப்பாக அண்மைய 10 ஆண்டுகளில், இதற்கான சீரமைப்பால், 10க்கு மேற்பட்ட காட்சிகள் மீட்கப்பட்டன. Wan Chun யுவான் மற்றும் Chang Chun யுவான் முதலிய பழமையான இடங்கள் முக்கியமாகச் செப்பணிடப்பட்டன. புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள மலைகளும் ஆறுகளும், பழங்காலத் தோற்றத்தின்படி மீட்கப்பட்டுள்ளன. தேவதாரு மரம், மூங்கில், வில்லோ மரங்கள், தாமரை மலர் முதலியவை, அங்குள்ள முக்கிய தாவர இயங்களாகும். பயணக் காட்சிகளில், Fu Hai, Chang Chun யுவான், Yi Chun யுவான் ஆகியவை இருக்கின்றன. அவற்றின் பரப்பளவு, 200 ஹெக்டர் ஆகும். வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர்காலம், குளிர்காலம் ஆகிய 4 பருவ காலங்களிலும், சிறப்பான பயணப் பண்பாட்டு நடவடிக்கைகள் இங்கு நடைபெறுகின்றன.