தாசப்பகவுண்டன் புதூர் எஸ். சுதர்சன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சி கேட்டேன். எஸ். சுந்தரன் அவர்கள், சீனாவில் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 77 கோடிஅயை தாண்டியுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் சீன மக்களின் சராசரி ஆயுட்காலம், உலக நாடுகளின் மக்களது ஆயுட்காலம் போன்றவற்றையும் அறிய முடிந்தது. மேலும் கிராமங்களில் வசிப்போரின் மக்கள்தொகை, நகரங்களில் வசிப்போரின் மக்கள்தொகை ஆகியவற்றையும் அரிந்துகொண்டேன்.
கலை: தொடர்ந்து நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி கவுந்தப்பாடி பி. குழந்தைவேல் எழுதிய கடிதம். சீனாவின் மேற்கு பிரதேசத்தில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் பற்றியும், சுகாதார அமைச்சகம் கலந்தாய்வு நடத்தியது குறித்தும், அயோடின் பயன்பாடு மக்களிடையே 90 விழுக்காடு அதிகரித்துள்ளது குறித்தும் அறிந்துகொண்டோம். மக்கள் நலமுடன் வாழ, அரசு எத்தனையோ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொண்டால் நலமுடன் வாழலாம். க்ளிட்டஸ்: திருச்சி, திருவெறும்பூர் ப. சுப்பிரமணி எழுதிய கடிதம். பிபிசி, வத்திகான், சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றை அவ்வப்போது கேட்டு வரும் நான் கடந்த 3 மாத காலமாகத்தான் சீன வானொலியை கேட்டு வருகிறேன். சீன மொழி அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சீன வானொலி என்னை வெகுவாக கவர்ந்துள்ளமைக்கு இது முக்கிய காரணம். சீன மொழியைக் கற்றுக்கொள்லும் ஆர்வமும் எனக்குள் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஒலிபரப்பபடுவதை போல், தமிழ் வழியில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. வசந்தத்திற்காகக் காத்திருக்கிறேன்1 என் வாசல்தேடி சீனத்துத் தென்றலின் வருகைக்காகப் பூத்திருக்கிறேன்!
க்ளீட்டஸ்: அடுத்து பாண்டிச்சேரி பெரியாகாலாப்பட்டு நேயர் பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். மே 29ம் நாள் ஒலிபரப்பான செய்தித்துகுப்பு நிகழ்ச்சியில், அழிவின் விளிம்பில் உள்ள சிறுபான்மை தேசிய இன மொழிகலை பாதுகாக்க சீனா எடுத்து வரும் முயற்சிகளை பற்றிய விரிவான தகவல்களைக் கேட்டேன். அனைத்து இனனங்களின் தாய்மொழிக்கும் சீனா மதிப்பளித்து வருகிறது. 55 சிறுபான்மை இன மக்களின் சொந்தமொழியை சிரப்புடன் வளர்க்க இத்தகைய நடவடிக்கை பெரிதும் உதவும். தகவல் வழங்கிய வான்மதி அவர்களுக்கு நன்றிகள். கலை: அடுத்து திருச்சி நேயர் சி. சம்பத்குமார் எழுதிய கடிதம். தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு பயணமாக வந்து கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும், சீன வானொலி நிலையத்தினரின் தெற்காசியப் பயணம் பற்றிய சிறப்பு மலர் கிடைத்தது. படித்து பரவசம் அடைந்தேன், நேயர்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் நேசமும் எம்மை மேலும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. நேயர்களாகிய எங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது என்று எழுதியுள்ளார்.
அன்பு சம்பத்குமார், எங்களுக்கும் நேயர்களை நேரில் வந்து சந்தித்து உரையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். நேயர்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் காட்டும் ஒரு அன்பின் வெளிப்பாடே எங்களது பயணம். க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை நேயர் வா. மோகன்ராஜ் எழுதிய கடிதம். சீன வானொலி அனுப்பிய தமிழ் மூலம் சீனம் புத்தகம் கிடைத்தது. அதை நானும் என் வீட்டார் அனைவரும் படிக்கிறோம். நான் நன்றாக சீன மொழியை கற்றால், என்னை சீனாவுக்கு படிக்க அனுப்புவதாக என் தந்தை கூறினார். நானும் சீனாவுக்கு வந்தால் சீன வானொலி நிலையத்தை பார்க்க வருவேன். சீன மொழி கற்க புத்தகம் அனுப்பிய உங்களுக்கு நன்றிகள் பல. சீன வானொலி மென்மேலும் சிறப்படையட்டும்.
|