• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-11 17:16:02    
தேயிலை மற்றும் குதிரைப்பாதையில் வர்த்தகம்

cri

திபெத்திய பண்டைய பதிவுகளின் படி, தங் வம்சக்காலத்தில் மேற்கு சிச்சுவான் மாநிலம் மற்றும் வட மேற்கு யுன்னான் மாநிலத்தை சேர்ந்த திபெத் இனத்தோர், சீன மையப்பகுதி சமவெளிகளில் விளைந்த புகழ் பெற்ற தேயிலை வகைகளை பெற முடிந்ததாக, வைத்திருந்ததாக அறியப்படுகிறது. கி.பி. 960-1279 ஆண்டு வரையிலான சுங் வம்சக்காலத்தில், யுன்னான் மற்றும் சிச்சுவான் மக்கள் திபெத்திய குதிரைகளுக்காக, தங்களது தேயிலையை பரிமாற்றம் செய்து கொண்டனர்.


ஒரு புறம், அதிகம் அசைவம் உண்பதால் ஏற்பட்ட கொழுப்புச் சத்தை நீக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் தேயிலை உதவியதைக் கண்டு திபெத்தியர்கள் பெரிதும் கவரப்பட்டனர்/ஈர்க்கப்பட்டனர். மறுபுறம் Han இனத்தோருக்கு குதிரைகள் என்பது மிக முக்கிய தேவையாக இருந்தது. ஆக, தேயிலை மற்றும் குதிரை வர்த்தகம் சிறப்பாக நடைபெற்று செழித்தது.
அக்காலத்தில் பண்டைய தேயிலை மற்றும் குதிரைப் பாதை வழியே பயணித்த ஒருவரது கூற்றுப்படி, Pu Er தேயிலை, திபெத்தியர்களுக்கு மிகவும் பிடித்த தேயிலையாக, தேநீராக இருந்தது.
யுன்னான் மாநிலத்தின் Pu Er என்ற பகுதியில் விளைந்த தேயிலையிலிருந்து பெறப்படும் தேனீர், சுவைக்கும், நிறத்துக்கும் பெயர் பெற்றது என்பதால், இதற்கு இந்த இடத்தின் பெயரே சூட்டப்பட்டது. Pu Er தேயிலை என்று. தேயிலை பண்பாட்டின் தொட்டிலாகவும் Pu Er திகழ்ந்தது. தங் வம்சக்காலத்தில், லான் சான்ஜியாங் ஆற்றின் கரையோரப் பகுதியிலும் Pu Er தேயிலை பயிரிடப்பட்டதாம்.


பருகும் போது முதலில் கசப்பாகவும் பின்னர், இனிப்பாகவும் இருந்ததாக Pu Er தேநீர் வர்ணிக்கப்பட்டது. Pu Er தேயிலை பற்றி பின்னர் நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம். இரண்டாம் உலக போரின் போது ஜப்பானியர்களிடம் மியன்மார் வீழ்ந்த போது, சீனாவின் அப்போதைய ஒரே சர்வதேச பாதையான யுன்னான்-மியன்மார் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. யுன்னான் மாநிலத்தின் Li Jiangலிருந்து Xiuangஇன் Kangding, திபெத் ஏன் இந்தியா வரை நீண்ட, பண்டைய தேயிலை மற்றும் குதிரைப்பாதை புத்துயிர் பெற்று முக்கிய வர்த்தக பாதையாக மாறியது. 1960களில், யுன்னான் திபெத் மற்றும் சிச்சுவான் திபெத் நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்ட பின் பண்டைய, தேயிலை மற்றும் குதிரைப்பாதை பொலிவிழந்தது, கண்டு கொள்ளப்படாமல் போனது. ஆனால் இன்றைய சில யுன்னான் மற்றும் சிச்சுவான் மாநிலங்கள் மற்றும் திபெத்தின் சுற்றுலாத் துறை வளர்ச்சியுடன், இந்த தேயிலை மற்றும் குதிரைப்பாதை மீண்டும், புத்துயிர் பெறத்துவங்கியுள்ளது. காடுகளும், கண்கவரும் ஏரிகளும், குதித்தோடும் ஆறுகளும் இப்பாதையின் நெடுகே காணப்படும் இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளாகும். லான்சான்ஜியாங், நுஜிபாங், மின்ஜியாங், யார்லூங் Zang Bo முதலிய ஆறுகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.


இப்பாதையில் செல்லும் போது, Hang Dan மலைகளிலிருந்து மேற்கே செல்லையில், கடல் மட்டத்திலிருந்து 4000 முதல் 5000 மீட்டர் உயரமுள்ள பல சிகரங்களை கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இயற்கையின் இந்த சவால்களை சமாளித்து அந்நாளில், தேயிலையும், குதிரையும் வர்த்தக பரிமாற்றம் செய்து கொள்ளப்பட இப்பாதையை அக்காலத்து மக்கள், பயன்படுத்தியுள்ளதை நினைத்தால், வியப்பு மேலிடுருகிறது.