• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-11 17:19:34    
மக்களின் வாழ்க்கையில் இணையத்தின் பங்கு

cri

தற்போது, சீனாவில் அகன்ற அலைவரிசை இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 9 கோடியே 70 இலட்சமாகும். இவ்வெண்ணிக்கை அமெரிக்காவை அடுத்து உலகில் 2வது இடம் வகிக்கின்றது. உலகின் அகன்ற அலைவரிசை பயன்படுத்துவோரில் 74 விழுக்காட்டினர் வளர்ந்த நாடுகளில் வசிக்கின்றனர். எஞ்சிய மக்களில் 17.5 விழுக்காட்டினர் சீனராவர். சீனாவில் அகன்ற அலைவரிசை இணையத்தின் வளர்ச்சி வேகம் வளரும் நாடுகளில் முதலிடம் வகித்து, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மதிப்பீட்டின் படி, 2010ம் ஆண்டில், சீனாவின் அகன்ற அலைவரிசை இணையச் சந்தையின் மொத்த அளவு 22 ஆயிரத்து 150 கோடி யுவானை எட்டக் கூடும். இச்சந்தைக்கு மாபெரும் உள்ளார்ந்த வளர்ச்சியாற்றலை உண்டு. இத்தகைய சீரான நிலைமையில், சீனா அகன்ற அலைவரிசை செய்தித் தொடர்பை நாட்டு வளர்ச்சியின் முக்கிய துறைகளில் சேர்த்து, பெரிய தகவல் தொழில் நாட்டை தகவல் தொழில் வல்லரசாக மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றது.
ஆனால், சீனாவின் அகன்ற அலைவரிசை இணையம் வளர்ச்சி வாய்ப்பை எதிர்நோக்கும் அதேவேளையில் பல்வேறு நாடுகளின் போட்டியையும் அறைகூவலையும் எதிர்நோக்குகின்றது. இப்பிரச்சினை குறித்து, திறந்த அகன்ற அலைவரிசை தொழிலை நடத்தி, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வணிகத் துறையில் பொது வெற்றி பெறுவது என்பது ஒரு நல்ல தேர்வாகும் என்று தொடர்புடைய நிபுணர்கள் கருதுகின்றனர். சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் உயர் தொழில் நுட்பத் தொழில் பிரிவின் தலைவர் XU QING கூறியதாவது


சர்வதேச மயமாக்கம் தகவல் தொழில் வளர்ச்சியின் இன்றியமையாத முடியாத பாதையாகும். சீனாவின் தற்சார்புடன் கூடிய புத்தாக்கம், திறந்த வடிவ புத்தாக்கமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் பரிமாற்றத்தை அதிகரிப்பதை ஆதரிக்கின்றோம். தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் மேம்பாடு, வரையறை வகுத்தல், தொழில்களை வளர்த்தல் ஆகியவற்றிலும் சேவையை ஆழமாக்குவதை ஆதரிக்கின்றோம் என்றார் அவர்.
உலகின் கவனத்தை ஈர்க்கும் 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், சீன அகன்ற அலைவரிசை இணையம் எதிர்நோக்கும் தலைசிறந்த வாய்ப்பாகவும் அறைகூவலாகவும் உள்ளது. வரலாற்றில் முதலாவது அகன்ற அலைவரிசை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சீனாவின் வாக்குறுதியாகும். அகன்ற அலைவரிசை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது, அகன்ற அலைவரிசை இணையம் மூலம், படங்களை அனுப்புவது,

இணையத்தை இணைப்பது, தரவுகளை அனுப்புவது உள்ளிட்ட பல்வகை சேவை புரிந்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, மக்களுக்கு மிக பன்முகமான, வேகமான, பாதுகாப்பான செய்தித் தொடர்புச் சேவை புரிவதாகும்.
இதனுடன் தொடர்புடை பொறுப்பை CHINA NETCOM என்னும் தொழில் நிறுவனம் ஏற்றுள்ளது. பல்வகை ஆயத்த பணிகளில் இந்த தொழில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நாடு அல்லது பிரதேசங்களைக் கடந்த சிறப்பு எண்ம அகன்ற அலைவரிசை இணைப்பு சேவையை வாங்குவது, ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் இரட்டை வழி மின் இணைப்புகளைக் கட்டியமைப்பது, 100க்கு அதிகமான சர்வதேச இணையத் தொழில் நிறுவனங்களுடன் நேரடி இணைய இணைப்பை உருவாக்குவது முதலியவை இந்தப் பணிகளில் இடம்பெறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, இவை அகன்ற அலைவரிசை இணையத்திலான தகவல் அனுப்புபல் மற்றும் பயன்பாட்டை நிறைவேற்ற முடியும். CHINA NETCOM நிறுவனத்தின் YU FEI அம்மையார் கூறியதாவது


CHINA NETCOM நிறுவனம் அதிக கடலடி ஒளியிழை கம்பி வடங்களைக் கொண்டுள்ளது. ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை வழங்கும் போது, இந்த ஒளி யிழை கம்பி வடங்களைப் பயன்படுத்தி, தகவல், ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சிகளை உலகின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பலாம் என்றார் அவர்.