• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-12 17:00:03    
ஷுங்ஷான் மலை ஓநாய்

cri

முன்பொரு காலத்தில் துங்குவோ என்ற அறிஞர் வாழ்ந்து வந்தார். கருணைமிக்கவர், பரிவிரக்கம் கொண்டவர் என்று பெயர் பெற்றவர் இந்த துங்குவோ. ஒரு முறை இந்த அறிஞர் துங்குவோ கழுதை மீதேறி ஷுங்ஷானுக்கு சென்றுகொண்டிருந்தார். வழியில் வேட்டைக்காரர்கள் சிலரை அவர் கண்டார். சிறிது தொலைவு சென்றது ஒரு ஓநாய் அவரிடம் ஓடோடி வந்து, ஐயா உங்கள் பையில் என்னை தயவு செய்து சிறிது நேரம் மறைத்து வைத்துக்கொள்ளுங்கள். வேட்டைக்காரர்களிடம் அகப்படாமல் நான் தப்பினால், உங்கள் இரக்கத்தை என்றென்றும் நான் மறவாமலிருப்பேன் என்று கெஞ்சியது.

இதைக்கேட்ட அறிஞர் துங்குவோ மனமிறங்கி, தனது பையிலிருந்த புத்தகங்களை எடுத்து ஓநாயை பையில் போட்டு அதன் மேல் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டார். அவ்வமயம் அங்கே வந்த வேட்டைக்காரர்கள், நரியை தேடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அதற்கு பின் தன்னை பையிலிருந்து வெளியே எடுக்குமாறு ஓநாய் கேட்டது. அறிஞர் துங்குவோவும் அப்படியே செய்தார்.

வெளியே வந்த ஓநாய், கெட்டவர்களிடமிருந்து என்னை காப்பாற்றிய உங்களுக்கு என் நன்றிகள். நான் இப்போது மிகவும் பசியாயிருக்கிறேன், எதையும் சாப்பிடாதா பட்சம் நான் உயிரிழக்க நேரிடும். எனவே நீங்கள் என்னை காப்பாற்ற நினைத்தால், நான் உங்களை தின்ன அனுமதிக்கவேண்டும் என்று பற்கள் தெரிய சிரித்த ஓநாய், சற்றும் எதிர்பாராத நிலையில் அறிஞர் துங்குவோ மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது. தன்னால் இயன்றவரை போராடி தன்னை பாதுக்கத்துக்கொண்டிருந்த துங்குவோ சற்றி தொலைவில் ஒரு வயோதிபர் வருவதைக் கண்டு, கொஞ்சம் நிம்மதியடைந்து, அவரிடம் ஓடிச் சென்று உதவி கேட்டார்.

தன்னை காப்பாற்றும்படி முதியவரிடம் கேட்ட துங்குவோ, நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்லி ஓந்நயிடம் அது செய்வது தவறு என்பதை விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் ஓநாயும் தன் தரப்பு நியாயத்தை முதியவரிடம் கூறியது. என்னை அறிஞர் பையில் மறைத்தபோது புத்தகங்களை மேலே அடுக்கி, என்னை மூச்சுவிட திணறும் நிலைக்கு தள்லினார். வேடர்கள் வந்தபோது நான் மூச்சுத் திணறி சாகவேண்டும் என்பதற்காக அவர்களோடு நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். எனவே ஏன் நான் அவரை உண்ணக்கூடாது என்று கேட்டது.

இதைக்கேட்ட அந்த முதியவர் ஓநாயிடம் நீ கொஞ்சம் மிகைபடுத்தி கூறுவதாகவே நினைக்கிறேன். எங்கே நீ எப்படி பைக்குள் இருந்தாய் என்பதை எனக்கு காண்பி என்று கூறினார். நரியும், மனித இரைச்சி நமக்கு கிடைப்பது நிச்சயம் என்ற மகிழ்ச்சியில் பைக்குள் நுழைந்தது. உடனே அந்த முதியவர் பையை மூடி இறுக்க கட்டினார். அறிஞர் துங்குவோவிடம் கத்தியிருக்கிறதா என்று கேட்டு, நரியை பையிலிருந்த மேனியில் வெட்டுமாறு கூறினார். அதற்கு துங்குவோ, வெட்டினால் ஓநாய்க்கு வலிக்கதா என்று கேட்க, முதியவர் சிரித்துவிட்டு, இந்த் அஓநாய் ஒரு நன்றிகெட்ட விலங்கு ஆனாலும் அதைக் கொல்ல உங்களுக்கு மனமில்லை. உண்மையிலேயே நீங்கள் மிகவும் கருணையுள்ளம் கொண்டவர்தான். ஆனால் நீங்கள் முட்டாளும் கூட என்று சொன்னபடி, தானே அந்த ஓநாயை வெட்டிக்கொன்றார்.