• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-13 14:40:58    
Miyun நீர் தேக்கம்

cri

Miyun நீர் தேக்கம், miyun வட்டத்திலுள்ள வடக்குப்பகுதியில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது, ஆசியாவில் மிக பெரிய செயற்கை ஏரியாகும். இது ya shan மணி எனவும் அழைக்கப்பட்டது. இந்நீர் தேக்கம், 3 லட்சத்தி 36 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவாகும். இதன் கொள்ளளவு, 438 கோடி கன மீட்டர். இதன் ஆழம், 60க்கு மேற்பட்ட மீட்டராகும். இது, பெய்சிங்கிலுள்ள பொது மக்கள் மற்றும் தொழிற்துறை பயன்பாட்டு நீரின் முக்கிய ஊற்றாகும். கோடைக்காலத்தில் இந்த நீர் தேக்கத்தின் சராசரி தட்ப வெட்ப நிலை, நகரப்பிரதேசத்தின் தட்ப வெட்ப நிலையை விட, 3 டிகிரி சென்டிகிரேடு குறைந்து காணப்படுகிறது. இது, கோடை வாழிடங்களில் ஒன்றாகும்.

இந்த நீர் தேக்கபணி, 1958ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் தொடங்கி, 1960ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் நிறைவடைந்தது. இந்த நீர் தேக்கத்தின் முழு பரப்பளவு, 188 சதுர கிலோமீட்டர். இதன் மேற்புறம் 1 லட்சத்தி 37 ஆயிரம் ஏக்கர் கொண்டது. (acre). இது, வெள்ளை ஆறு, tide ஆறு, உள் ஏரி ஆகியவற்றைப் பிரிக்கின்றது. இதன் மொத்த நீர் சேமிப்பு அளவு, 43 ஆயிரத்து 170 கோடி கன மீட்டர்.

சலசலவென ஓடும் ஊற்று நீரானது, அமைதியான இத்தேக்கத்தில் சேர்கிறது. அதே வேளையில், பல்வகை கொடிகளுடன் மீன்கள் வாழும் அத்தேக்கத்தில், பசித்தலம், மணிமண்டபம், செய் குன்றுகள், பைன், சைப்பிறஸ் மரங்கள் ஆகியவற்றின் பிம்மங்கள் கண்ணுக்கு விருந்து அளிக்கின்றன. இளம் காதலர்கள் மனம்விட்டு பேசுவதற்கு ஏதுவான அமைதியான இடமாக, miyun நீர் தேக்கம் இருக்கிறது. இந்த இனிமையான இடத்தை, அருவிகள் ஓடும் பசு மரத் தோப்புகளும் மூங்கில் கூட்டங்களும் அழகு செய்கின்றன. பாறை வெடிப்புகளிலிருந்து பாயும் பளிங்கு போன்ற ஊற்றுகள், குளுமையும் உற்சாகமும் ஊட்டுகின்றன.

பரந்த தேக்கத்தில், ஆயிரக்கணக்கான மீன்கள் இன்றும் காணப்படுகின்றன. நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வருகை, ஒரு கண்கொள்ளாக் காட்சி என்று கூறப்படுகிறது.

சுவையான உணவு :சுட்டு வைத்த மீன் இத்தேக்கத்தின் சிறப்பு உணவாகும். இது சுவையானது மட்டுமல்ல, இதன் விலையும் குறைவாக இருக்கின்றது. இத்தேக்கத்துக்குச் சென்றால், சுட்ட மீன்களைச் சாப்பிடுவது உறுதி.

விளையாட்டு:இங்கு படகில் பயணம் செய்வது ஒரு சிறந்த விளையாட்டாகும். இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், படகில் சென்று இன்புறுவதை விரும்புகின்றனர்.