• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-13 21:30:53    
ஹுபெய் மாநிலத்திலுள்ள இயற்கைக் காடு

cri

சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஹுபெய் மாநிலத்தில், Shen nong jia என்னும் புகழ்பெற்ற இயற்கைக் காடு உள்ளது. மனித நடமாட்டம் இல்லாததால், இங்குள்ள இயற்கைச் சூழ்நிலை சீராக இருக்கிறது. மேலும், சீனாவின் முக்கிய வன விலங்கு மற்றும் தாவர மூலவளக் கருவூலமாக இக்காடு மாறியுள்ளது. இன்று, இந்த வன பாதுகாப்பு மண்டலம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, Shen nong jia என்னும் இயற்கைக் காட்டில் வாழும் சீனாவின் முக்கிய பாதுகாப்பு விலங்கான தங்க குரங்கின் குரலாகும். சுமார் 3000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 4700 வகையான விலங்குகளும் தாவரங்களும், இங்கே காணப்படலாம்.

கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகள் முதல், இந்த இயற்கைக் காட்டிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டதால், வன விலங்குகளின் உயிர் வாழ்வு மாபெரும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. இயற்கைச் சூழ்நிலை மோசமானதால், சீன அரசு மற்றும் நிபுணர்கள் இதன் மீது, கவனம் செலுத்தத்தொடங்கினர். 2000ம் ஆண்டின் மார்ச் திங்களில், Shen nong jiaவில், இயற்கைக் காட்டுக்கான பாதுகாப்புத் திட்டப்பணி தொடங்கியது. மரம் வெட்டுதல் பன்முகங்களிலும் தடுக்கப்பட்டது. 7 ஆண்டுகால பாதுகாப்பு நடவடிக்கை மூலம், Shen nong jiaவில் காடு வளர்ப்பு பரவல் நிலப்பரப்பு, 88 விழுக்காட்டை எட்டியுள்ளது. இந்த மாற்றம், இங்குள்ள வன விலங்குகளுக்கு சீரான உயிர் வாழ்வு சூழ்நிலையை வழங்கியுள்ளது. வனப்பாதுகாப்புப் பணியாளர் Jiang ling ling அம்மையார், கடந்த சில ஆண்டுகளில், Shen nong jia காட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அவர் கூறியதாவது:

2000ம் ஆண்டில் இயற்கைக் காட்டுப் பாதுகாப்பு திட்டப்பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மலை மேலும் பசுமையாகவும், நீர் மேலும் தூய்மையாகவும் மாறியுள்ளன என்றார் அவர்.

இங்கு வந்த பயணிகள், சீரான சுற்றுச்சூழலையும், இயற்கை உற்பத்தி வழிமுறையையும் காணலாம். Shen nong jia காட்டு மண்டலத்தின் அதிகாரி Qian yuan kun அறிமுகப்படுத்தியதாவது:

இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை செவ்வனே செய்வது, மலைகளின் மூலவளத்தைப் பயன்படுத்தி, பயிரிடுதல் மற்றும் வளர்ப்புத் தொழில் மேற்கொள்வதை, வளர்த்து வருகிறது. தற்போது, இந்தக் காட்டு மண்டலத்தின் பணியாளரின் வருமானம், பெருமளவில் அதிகரித்துள்ளது என்றார் அவர்.

Shen nong jia காட்டு மண்டலத்தைச் சேர்ந்த 81 கிராமங்களில், 35 கிராமங்கள், இயற்கைச் சுற்றுச்சூழல் வேளாண்மை கிராமங்களாக மாறியுள்ளன. பயிரிடுதல் மற்றும் வளர்ப்புத் தொழிலைத் தவிர, தனிச்சிறப்பியல்புடைய இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா தொழிலும் வளர்க்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், இங்கு 4 பெரிய சுற்றுலா காட்சியகங்கள், நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதி்ல, Mu yu வட்டம், பயணிகள் மிகவும் அதிகமாக வருகை தரும் இடமாகும். இவ்வட்டத்தில் பெரும்பாலான நகரவாசிகள், சுற்றுலாவுடன் தொடர்புடைய வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். Mu yu வட்டத்திலுள்ள Shen nong jia மலை பண்ணைத் தோட்டம் என்ற ஹோட்டலின் உரிமையாளர் Li shi kai கூறியதாவது:

இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, Shen nong jiaவின் நிலைமை மேன்மேலும் சீராகியுள்ளது. குறிப்பாக, கோடைக்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாகியுள்ளது. இதனால், கடன் வாங்கி, இந்த ஹோட்டலை நடத்துகின்றேன். கடந்த சில ஆண்டுகளில் எங்களின் வருமானம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றார் அவர்.