• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-18 16:55:29    
முட்டை இறால்

cri

வாணி – வணக்கம், நேயர்களே. மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. க்ளீட்டஸ், இந்தியாவில் ஆம்லெத் எனும் ஒரு வகை உணவு அடிக்கடி சாலைகளில் காணப்பட்டுள்ளேன்.

க்ளீட்டஸ் – ஆமாம், இதில் முட்டை, வெங்காயம் இடம்பெறுகின்றன.

வாணி – இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் ஒரு எளிதான முட்டை இறால் ஆகியவை இடம்பெறும் சீன உணவு வகையை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். இறால் ஆம்லெத் என்பது அழைப்படலாம்.

க்ளீட்டஸ் – சரி, தேவையான பொருட்கள் என்ன?

வாணி – நான் சொல்கின்றேன்.
இறால் 150 கிராம்
முட்டை 3
வெங்காயம் சிறிதளவு
உப்பு 4 கிராம்
சமையல் மது அரை தேக்கரண்டி
மிளகு தூள் சிறிதளவு
சமையல் எண்ணெய் போதிய அளவு

வாணி – முதலில், இறால்களை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். இவற்றின் தலைகளையும் தோல்களையும் முற்றிலும் நீக்க வேண்டும். பிறகு, சுத்தமான தாள் மூலம் இவற்றிலிருந்த நீரை நீக்கவும். வெங்காயத்தை சிறிதளவாக நறுக்கி கொள்ளுங்கள்.

க்ளீட்டஸ் – இறால்களை தட்டில் வைத்து, உப்பு, மிளகு தூள், சமையல் மது, ஒரு முட்டையின் வெள்ளை பகுதி ஆகியவற்றுடன் சேர்ந்து நன்றாக கலக்க வேண்டும்.

வாணி –எஞ்சிய முட்டையின் மஞ்சள் கருவையும் வேறு 2 முட்டைகளையும் தட்டில் வைத்து, உப்பைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் சரி அளவுடைய உணவு எண்ணெயை ஊற்றவும். சுமார் 10 வினாடிகளுக்குப் பின், இறால்களை இதில் கொட்டு, வறுக்கவும்.

வாணி – வறுக்கப்பட்ட இறால்களை வாணலியிலிருந்து எடுக்கவும். இவற்றை முட்டை கலப்பில் சேர்க்கவும்.
மீண்டும் வாணலியில் உணவு எண்ணெயை ஊற்றி, சில வினாடிகளுக்குப் பின், வெங்காயத்தை இதில் வைக்கவும், பிறகு,முட்டை இறால் கலப்பை இதில் ஊற்றலாம். மிதமான சூட்டில் வறுக்கவும்.

க்ளீட்டஸ் – விரைவில் முட்டை இறால் கலப்பு பொன் நிறமாகி Egg cake மாறிவிடும். இதன் மறு பக்கம் வறுக்கப்பட வேண்டும்.

வாணி – விரைவில், சுவையான இறால் ஆம்லெத் தயாரிக்கப்பட்டது. நீங்கள் விரும்பினால், மக்காச்சோள ஸ்டார்ச் உடன் இதனைச் சாப்பிடலாம்.

க்ளீட்டஸ் – வாணி, இது ஒரு மிக எளிதான உணவு வகையாகும்.

வாணி – ஆமாம், தயாரிக்கும் நேரம் உட்பட 15 நிமிடங்கள் போதும். காலையிலும் இதனைத் தயாரிக்கலாம். சாப்பிட்டப் பிறகு, முழு காலையில் உணர்ச்சியுடன் பணி புரியலாம். இறாலும், முட்டையும் அதிக புரத ஊட்டச்சத்து கொண்ட உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையை சாப்பிடுங்கள் என்று பல மருத்துவர்களும் முன்மொழிகின்றனர்.