• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-19 11:22:06    
பன்றிக்கு மது வண்டல்

cri

ஹேஃபூ மலையின் அடிவாரத்தில் ஒரு குறு மண்டபம் உண்டு. இது வாங் போ என்ற ஒரு வயதான பெண்மணிக்கென உருவாக்கப்பட்ட கோயில் போன்றது. இந்த வாங் போ மூதாட்டி எப்போது வாழ்ந்தார் என்பது எவருக்கும் தெரியாது. இந்த மூதாட்டி மதுவை விற்று வாழ்க்கை நடத்தினார் என்று ஒரு கதை உண்டு. இம்மூதாட்டி மது விற்றுக்கொண்டிருந்த காலத்தில் அங்கே ஒரு தாவ் மத குரு ஒருவர் வாழ்ந்து வந்தாராம். இந்த தாவ் மத குரு, இந்த வாங் போ மூதாட்டியின் கடைக்கு அடிக்கடி வருவாராம். வரும்போதெல்லாம் மூதாட்டியிடம் மதுவை வாங்கிக் குடிப்பார் ஆனால் அதற்குண்டான காசை தரமாட்டார். இந்த மூதாட்டியும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஒரு நாள் இந்த தாவ் மத குரு மூதாட்டியிடம், உங்களுக்கு நான் ஒரு முறை கூட நான் குடித்த மதுவுக்காக காசு கொடுத்ததில்லை. எனவே உனக்காக ஒரு கிணற்றை வெட்டி தருவேன் என்று கூறி ஒரு கிணற்றை உருவாக்கித் தந்தாராம். இந்த கிணற்றில் சுரந்ததது நீர் அல்ல, மிக மிக சுவையான மதுவை சுரந்தது அந்த கேணி. தாவ் மத குரு மூதாட்டியிடம் மது சுரந்த கிணற்றை காட்டி இதுதான் நான் உனக்கு தரும் பணம் என்ரார்.

இதற்கு பின் அந்த மூதாட்டி சொந்தமாக மதுவை தயாரிப்பதில்லை. கிணற்றில் சுரந்த மதுவை முகர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு விற்றாள். மதுவை குடித்தவர்கள், அடடா மிக மிகச் சுவையான மத்வாக இருக்கிறதே, இதுவரை நான் இப்படியான ஒரு மதுவை சுவைத்ததில்லையே என்று பராட்டினர். வாடிக்கையாளர்கள் மூதாட்டியின் மதுக்கடையை மொய்க்கத் தொடங்கினர். இந்த சேதி ஊரெங்கும் பரவ, மூதாட்டியின் மது பிரபலமானது, அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் மூதாட்டி பெரும் செல்வந்தரானார்.

ஒரு நாள் மது கிணற்றை அகழ்ந்து மூதாட்டிக்கு அளித்த தாவ் மத குரு வந்தார். அவரைக் கண்டதும் மூதாட்டி புன்சிரிப்புடன் வரவேற்று அவரது உதவிக்கு நன்றி கூறினாள். மது நன்றாக இருக்கிறதா என்று கேட்டார் குரு. மூதாட்டியின், மிக மிக சுவையான மது கிடைக்கிரது. என்ன எனது பன்றிகளுக்கு போடத்தான் மதுவின் அடியில் தங்கும் மண்டி, வண்டல் இல்லை என்றாராம். இதைக் கேட்ட தாவ் மத குரு சிரித்தபடி மூதாட்டியின் கடையின் சுவற்றில் பின்வருமாறு எழுதினாராம்.
நெடிதுயர்ந்தது வானம்

ஆனால் மனித ஆசை அதனினும் உயர்ந்தது
கிணற்று நீரை மதுவாக விற்கிறாள்
இருந்தும் தனது பன்றிக்கு அதில் வண்டல் இல்லையே என்று புகார் செய்கிறாள்
இப்படி எழுதியபின் அவ்விடத்திலிருந்து அகன்றார் தாவ் மத குரு. அதற்கு பின் அந்த கிணறு மதுவை சுரக்கவில்லையாம்.