மிக வறுமையான குடும்பத்தில் வாழ்கின்ற மாணவர்களுக்காக அரசு, இலவசம் அல்லது உதவி கொள்கையை மேற்கொள்கிறது. இதிலிருந்து நாம் நலன் பெறலாம் என்று தெரிய வருந்தது
என்றார் அவர். நேயற்களே இந்த கொள்கை பற்றி விளக்கி கூறுகிறேன். இது வறுமையான மாணவர்களுக்கு அரசு உதவி அளிக்கும் ஒரு கொள்கையாகும். கட்டாய கல்வி காலக்கட்டத்தில் உள்ள மாணவர்கள், எடுத்துக்காட்டாக, துவக்கப்பள்ளி மற்றும் இடைநிலை பள்ளியில் பயில்கின்ற மாணவர்களுக்கு அரசு, இலவச பாடநூல், கல்வியுடன் தொடர்புடைய பிற செலவை நீக்குவது ஆகிய சலுகைகளை வழங்குகிறது. தவிரவும், உறைவிட வசதியுடைய மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. இது, இக்கொள்கையின் விரிவான உள்ளடக்கமாகும். 2004ம் ஆண்டு முதல், இக்கொள்கை, சீனக் கிராமப்புறத்தில் நடைமுறைப்படுத்தப்பட துவங்கியது. கடந்த ஆண்டு வரை, நகரங்களில் வாழும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், இக்கொள்கையால் நலன் பெற துவங்கினர். சௌ சூங் பீன், இக்கொள்கையின் மூலம் நலன் பெறுபவர் ஆவார். அரசாங்கத்தின் உதவியால், அவருடைய கல்வி தடையின்றி தொடர்ந்து வருகிறது. இப்போது, இடைநிலை பள்ளியின் இரண்டாவது வகுப்பில் பயில்கின்றார். கல்வி வசதி சிறிதளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய பள்ளி, பைய் மோ ச்சியாங் பள்ளியாகும். மொத்தம் 2400 மாணவர்களில், அவரை போல, இக்கொள்கையிலிருந்து நலன் பெறுவோரின் எண்ணிக்கை, 170 ஆகும்.ய. உள்ளூர் கல்வி பணியகத்தின் தலைவர் து சாங் லியே, இக்கொள்கை ஏற்படுத்தும் செல்வாக்கை பற்றி போசுகையில் கூறியதாவது
இக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் விகிதம் குறைந்துள்ளது. இவ்வாண்டு, இவ்விகிதத்தை தொடர்ந்து குறைக்க பாடுபடுவோம், கட்டாய கல்வி காலக்கட்டத்தில், இவ்விகிதம், 1 விழுக்காட்டுக்கு கீழாக குறைக்க பாடுபடுவோம் என்றார் அவர். சீனாவில், வளர்ச்சி துறையில் நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி அதிகம், கல்வி துறையிலும் இந்த இடைவெளி அதிகமாக காணப்படலாம். கிராமப்புறத்திலான கல்வி வசதிகள் நகரங்களில் இருப்பதை விட பின்தாங்கிய நிலையில் உள்ளன.
|