திபெத்தில் மாவட்டம், வட்டம் ஆகிய 2 நிலை மக்கள் பேரவை மற்றும் அரசாங்கத் தேர்தல் பணி தற்போது அடிப்படையில் நிறைவேறியுள்ளது. பூர்வாங்க புள்ளிவிவரங்களின் படி, திபெத்தில் மாவட்டம், வட்டம் ஆகிய 2 நிலை மக்கள் பேரவை மற்றும் அரசாங்கங்களில் திபெத்தினம் உள்ளிட்ட சிறுப்பான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வகிக்கும் விகிதாசாரம் 80 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. திபெத் இனம் உள்ளிட்ட பல சிறுபான்மை தேசிய இனங்களை முக்கியமாக கொண்ட தேசிய இனத் தன்னாட்சி பிரதேசமாக திபெத் திகழ்கின்றது. புள்ளிவிவரங்களின் படி, 2006ம் ஆண்டின் இறுதி வரை, முழு திபெத் தின்னாட்சி பிரதேசத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை மொத்த அதிகாரிகளில் சுமார் 69 விழுக்காடு வகித்தது. திபெத்தில் சிறப்பு தொழில் நுட்ப திறமைசாலிகளில் 74 விழுக்காட்டினர் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாவர்.
|