• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-16 17:56:45    
சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களின் பொருளாதாரம்

cri

கடந்த சில ஆண்டுகளாக, மக்கள் தொகை குறைந்த தேசிய இனப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் பொருட்டு, சீன அரசு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப்பிரதேசங்களின் மக்கள் மாபெரும் நலன் பெற்றுள்ளனர்.
சீனாவின் சிங்கியாங், யுன்னான், உள் மங்கோலியா, சிங்காய், திபெத் முதலிய தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில், மக்கள் தொகை குறைந்த தேசிய இன பிரதேசங்களின் சமூக பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இது பற்றி, கடந்த சில ஆண்டுகளில், சீன அரசு பல கொள்கைகளை மற்றும் திட்டங்களை வெளியிட்டு, மக்கள் தொகை குறைந்த தேசிய இனங்களின் வளர்ச்சியை பெரிதும் ஆதரிக்கின்றது. இவ்வாண்டு, அரசு ஒதுக்கீடு செய்துள்ள சிறப்பு நிதித்தொகை சுமார் 40 கோடி யுவானாகும்.
தற்போது, பல்வேறு பிரதேசங்களில், தேசிய இனத் தனித்தன்மை வாய்ந்த பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. Pu Er தேயிலை தொழில், .யுன்னான் மாநிலத்தின் பல சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களின் முதுகெலும்பு தொழில்களில் ஒன்றாக மாறியுள்ளது. உள் மங்கோலியா மற்றும் சிங்கியாங்கில், செம்மறி ஆட்டு உரோமம் மற்றும் cashmere உற்பத்தி அளவு, சீனாவில் முன்னணியில் வகிக்கின்றது. குவாங் சி, சீனாவின் மிக பெரிய சர்க்கரை உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த பயன்பாட்டு தளமாக மாறியுள்ளது.