• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-17 14:36:10    
பெய்ஜிங் சர்வதேச நடன நிகழ்ச்சி விழா

cri

தற்போது நடைபெற்றிருக்கின்ற ஐந்தாவது பெய்ஜிங் சர்வதேச நடன நிகழ்ச்சி விழாவில் சீனா மற்றும் உலகின் பல்வேறு இடங்களின் தலை சிறந்த நடனங்கள் கூட்டி அரங்கேற்றப்படுகின்றன. பெய்ஜிங் ரசிகர்கள் பகட்டான நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் போது தாங்களையே மறந்து விட்டனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் பெய்ஜிங் சர்வதேச நடன நிகழ்ச்சி விழா இவ்வாண்டு வரை ஐந்து மூறையாக நடைபெறுகின்றது. நவம்பர் பத்தினைந்தாம் நாளிரவு, மாபெரும் திபெத் தேசிய இன இயல்பு இசை நாடகமான "திபெத் மீதான ஆர்வம்" Baoli நாடக அரங்கத்தில் வழங்கப்பட்டது இத்துடன் இவ்வாண்டின் நடன விழா தொடங்கியது என்று பொருள்படுகின்றது. திபெத் தேசிய இன மக்களின் வாழ்க்கை, நாட்டுப்புறக் கலை, பழக்கவழக்கங்கள், மத வைபவங்கள் ஆகியவை பற்றி"திபெட் மீதான ஆர்வம்"என்ற நாடகம் வெளிப்படுத்துகின்றது. விதம்விதமான திபெத் தேசிய இன மக்களின் வாழ்க்கையின் சுருக்கமாக இந்நாடகம் திகழ்கின்றது.

"திபெத் மீதான ஆர்வம்"என்ற நிகழ்ச்சியை வழங்கும் குழு ஒரு உண்மையான அரசுசாரா குழு ஆகும். புகழ்மிக்க நடனக்காரி Yang Liping அம்மையாரைத் தவிர, எல்லா நடனக்காரிகளும், திபெத் தன்னாட்சி பிரதேசத்திலிருந்து வந்த ஆயர்கள்களும் சாதாரண கலைஞர்களும் ஆவர். வாழ்க்கை உணர்வு ததும்பும் அவர்களின் அரங்கேற்றம், ரசியர்களால் கலகலப்பாக வரவேற்கப்பட்டது. Yang Liping அம்மையார் "திபெத் மீதான ஆர்வம்"என்ற இசை நாடகத்தை படைத்தவர்களில் ஒருவராக இருக்கின்றார். அத்துடன், அவர் நாடகத்தில் தலைமை மற்றும் தனி நடனக்காரியாக இருக்கின்றார். செய்தி ஊடகத்தும் பேட்டி அளித்த போது, தான் உயிராற்றல் ததும்பும் நாட்டுப்புற நடனத்தையும் திபெத் இனத்தின் நடனத்தையும் விரும்புவதாக அவர் கூறினார்.

 இவ்வாண்டின் சர்வதேச நடன நிகழ்ச்சி விழாவில், ஷாங்காய் பாலே நடகக் குழு வழங்கிய "காதலனுக்கான உணர்வு" என்றும் பாலே நாடகம் பார்வையாளர்களுக்கு சிறப்பான உணர்வைத் ஊட்டியுள்ளது. ஆழமான பழைய ஷாங்காயின் நடையுடை பாவனைகளை அது வெளிப்படுத்துகின்றது. கடந்த நூற்றாண்டின் 30ஆம் அல்லது 40ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஒரு காதல் கதையை அது வல்ணிக்கின்றது.

 

ஐந்தாவது பெய்ஜிங் சர்வதேச நடன நிகழ்ச்சி விழா 45நாட்களாக நீட்டியுள்ளது.ஸ்பெயின், ஆஸ்திரேலிய அமரிக்கா முதலிய நாடுகளான புகழ்மிக்க நாடகங்களும் சீனாவின் பல்வேறு இடங்களின் நாடக மணிகளும் ரசிகர்களுக்கு அருமையான கலை அனுபவத்தை வழங்கும்.