திபெத்தின் பொருளாதார அதிகரிப்பு
cri
திபெத்தின் பொருளாதாரம் தொடர்ந்த 7 ஆண்டுகளாக 12 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகின்றது. பொருளாதார வளர்ச்சியில் சீரான வேகமான நிலைமை காணப்படுகின்றது. திபெத்தில் நடைபெற்ற பொருளாதார பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது. இவ்வாண்டு முழு பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 3420 கோடி யுவானை அடையக்கூடும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 13.8 விழுக்காடு அதிகமாகும். வரலாற்றில் இது மிக உயர் பதிவாகும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் zhang qing li தெரிவித்தார். திபெத்தில் அடிப்படை வசதியின் கட்டுமானம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, தொழில் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு சமூக இலட்சியங்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகை கூடுதலாக அதிகரிப்பதுடன், முழு திபெத்தின் சுய வளர்ச்சி ஆற்றலும் தெளிவாக அதிகரித்துள்ளது என்று தெரிய வருகின்றது.
|
|