• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-17 19:34:17    
திபெத் பொருளாதாரம்

cri
திபெத்தின் பொருளாதாரம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக 12 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகின்றது. பொருளாதார வளர்ச்சியில் சீரான, வேகமான நிலைமை காணப்படுகின்றது. திபெத்தில் நடைபெற்ற பொருளாதார பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது. இவ்வாண்டு முழு பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 3420 கோடி யுவானை அடையக்கூடும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 13.8 விழுக்காடு அதிகமாகும். வரலாற்றில் இது மிக உயர் பதிவாகும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் zhang qing li தெரிவித்தார். இவ்வாண்டு திபெத்தின் வெளிநாட்டு வர்த்தக அளவு மேலும் விரிவாகியுள்ளது. மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 34 கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும் என்றும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக, திபெத்தில் அடிப்படை வசதியின் கட்டுமானம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, தொழில் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு சமூக இலட்சியங்களுக்கான ஒதுக்கீட்டுத் தொகை கூடுதலாக அதிகரிப்பதுடன், முழு திபெத்தின் பொருளாதாரத்தின் சுய வளர்ச்சி ஆற்றலும் தெளிவாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சிங்காய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதுடனும், நாதுலா கணவாயில் சீன-இந்திய எல்லை வர்த்தகப் பாதை மீண்டும் திறந்து வைக்கப்பட்டதுடனும், உள் நாட்டு, வெளிநாட்டு வணிகர்கள் திபெத்தில் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.