• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-17 15:56:25    
மாசுபாடு இல்லாத வாகன தொழிற்நுட்ப வளர்ச்சி: பகுதிI

cri

கணினி காலமான 21 ஆம் நூற்றாண்டு சாதனைகள், வெற்றிகள் பல பெற்றிருந்தாலும், பல்வேறு அறைகூவல்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக புவி வெப்பமேறல் உலக நாடுகள் அனைத்திற்கும் மாபெரும் சவாலாகவும், இணைந்த முயற்சிகளால் மட்டுமே அணுகக்ககூடியதாகவும் அமைந்து விட்டது. எல்லா நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. வாகனங்கள் வெளியேற்றும் மாசுபொட்கள் உலக வெப்பமேறலில் பெரும் பங்காற்றுவது குறிப்பிடதக்கது. அதனால் மாற்று உற்பத்தி மற்றும் பயன்பாடு என புதிய வழிகளில் பல நாடுகள் நடைபோட தொடங்கி விட்டன. தற்போது பெட்ரோல், டீசல், மின்னாற்றல், மற்றும் கலவை எரிபொருள் போன்ற எரியாற்றல்களை கொண்ட வாகனங்கள் காணப்பட்டாலும், பெட்ரோல், டீசல் போன்ற எரியாற்றல்களால் இயங்கும் வாகனகங்களே அதிகம். மாசுபாடுகள் இல்லாத வாகனங்கள் தயாரிக்கும் பணி மற்றும் அதை சந்தை படுத்துவது இன்றைய காலகட்டத்தில் எல்லா நாடுகளுக்கும் முன்னுள்ள மிகப்பெரிய அறைகூவலாகும். முதலாவதான சந்திர ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பிய பிறகு, இக்காலத்திற்கும், சீன மண்ணுக்கும் ஒத்த வாகனத்துறையில் சாதனைக்கான ஆய்வு முயற்சிகளை சீனா ஆரம்பித்துள்ளது.

பெட்ரோல் இயந்திர உற்பத்தியில் மிகவும் முன்னேறியுள்ள மேற்கத்திய வாகன உற்பத்தியாளர்களின் அதே பாதையை பின்பற்றுவதை விட புதிய தலைமுறைக்கான மாசுபாடு இல்லாத கார்களை உருவாக்கும் ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் வான் காங் இதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரல்லாத நிபுணராக அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். வாகன நுட்பத்தில் வல்லுனரான இவர் ஜெர்மனி ஆடி வாகன நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணிபுரிந்துள்ளார். வான் காங்கினுடைய தொழில் நுட்ப புத்தாக்க பங்களிப்புகள் அந்நிறுவனத்திற்கு சிறப்பான நிதியியல் சார் வெற்றிகளை பெற உதவியது. 2000 ஆண்டில் சீனா திரும்பிய அவர் முக்கியமான தேசிய மின்னாற்றல் வாகன திட்டத்திற்கு பொறுப்பேற்றார். அதன் பின் ஷாங்காயிலுள்ள தொங்ஜி பல்கலைக்கழகத்தின் அதிபராக பணியாற்றினார்.

"மாசுபாடுகள் இல்லாத எரிபொருள் மின்கல வாகனங்கள் எதிர்கால சீனாவின் வாகன தொழில் துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய நுட்பமாகும்" என்று திட்டத்தின் தொடக்க விழாவில் வான் காங் கூறினார். இந்த திட்டத்திற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், ஐநாவின் வளர்ச்சி திட்டம் மற்றும் சீனாவின் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைக்க, தொழிற்நுட்ப புத்தாக்க பயன்பாட்டை விரைவுபடுத்தும் உலக சுற்றுச்சூழல் வசதியமைப்பு முதலிய அமைப்புகள் உதவுகின்றன. இந்த திட்டத்தின் பயன்பாடு 2008 பெய்சிங் ஒலிபிக் மற்றும் 2010 ஷாங்காய் உலக பொருட்காட்சியின் போது வெளிப்படும். இவ்விரு நகரங்களிலான முக்கிய நிகழ்வுகளுக்கு போக்குவரத்து வசதி மாசுபாடு இல்லாத வாகனகங்கள் மூலமே வழங்கப்பட உள்ளது. "இது காலநிலை மாற்றத்தை தடுப்பது மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பது என்ற சீனாவின் உறுதிப்பாட்டை நனவாக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்" என்று வான் காங் குறிப்பிட்டார்.

சீனா இப்பிரச்சனையில் அதிக முனைப்பு கொள்ள காரணங்கள் உள்ளன. சீனாவின் மூல எரியாற்றல்களான நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய், காற்று மாசுபாட்டில் 90 விழுக்காடு வகிக்கிறன. 2005 ஆம் ஆண்டு அரசு புள்ளிவிபரங்கள் படி மொத்த எரியாற்றல் நுகர்வில் போக்குவரத்து துறை 16.3 விழுக்காட்டை பெற்றுள்ளது. பெட்ரோல் எரியாற்றல் கொண்ட கார்கள் அதிகமாகும் போது இந்த நுகர்வு விழுக்காடு அதிகரிக்கும்.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை உயரும் போது உள்நாட்டிலும் விலை உயர்வு ஏற்படுகிறது. இவ்வாறு தொடருகின்ற விலையேற்றம் மாற்று ஆற்றல் கொண்ட வாகன ஆய்வுக்கு வித்திடுகிறது. எரியாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் வளரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் எரிபொருள் மின்கல பேருந்து வியாபாரநோக்கிலான திட்டம் செயல்படுத்தப்பட்டது. எரிபொருள் மின்கலம் என்பது ஹைட்ஜைன் மற்றும் ஆக்ஸின் கலப்பால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலனாகும். எதிர்வினையால் ஹைட்ரஜனிலிருந்து எலெக்ட்ரான் விடுபட்டு கலனில் வினை ஊக்கியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸின் கலப்பால் ஏற்படும் வேதியல் எதிர்வினையால் உருவாகும் ஆற்றல் மின்சாரத்திற்கு மூலமாக அமைகிறது. இத்தகைய எரிபொருள் மின்கலன்கள் பொருத்தப்பட்ட பேருந்துகள் புவி வெப்பமேறலுக்கு காரணமாகின்ற கரியமில வாயு மற்றும் பசுங்கூட வாயுக்களை குறைந்த அளவில் வெளிவிடுபவையாகும். வியாபார நோக்கிலான எரிபொருள் மின்கல வாகனத் திட்டம் என்றும் நிலைநிற்க கூடிய போக்குவரத்து வசதியை நோக்கமாக கொண்டது.

"எரிபொருள் மின்கல பேருந்துகள் உலக வெப்பமேறலின் சுமையை குறைப்பதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதையும், காற்று மாசுபாடு உடல் நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் குறைக்க புது வழிகளை தருகின்றன" என்று சீனாவிலுள்ள ஐநா வளர்ச்சி திட்ட துணை இயக்குனர் கிஷ்ணன் கொடே கூறினார். திட்டத்தின்படி 2009 ஆம் ஆண்டு மூன்று முதல் ஆறு எரிபொருள் மின்கல பேருந்துகள் உலக பொருட்காட்சிக்கு முன்பு ஷாங்காய் சாலையில் இயக்கப்பட உள்ளன.