• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-24 15:20:36    
மாசுபாடு இல்லாத வாகன தொழிற்நுட்ப வளர்ச்சி: பகுதிII

cri

இதே போன்று பெய்ஜிங்கில் ஏற்கெனவே நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூன்று எரிபொருள் மின்கல பேருந்துகள் நகரத்தின் வட மேற்குப் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவ்வகை பேருந்துகளை மக்களுக்கு அறிமுகம் செய்வதும், இத்திட்டத்தின் தொழில்நுட்ப தகவல்களை ஓட்டுனரிடமிருந்து சேகரிப்பதும் நடைபெறுகிறது. இந்த தகவல்களை சீனாவின் எரிபொருள் மின்கல வகனங்களின் வளர்ச்சிக்கும் அதனோடு தொடர்புடைய தொழில்நுட்ப தரத்தின் வளர்ச்சிக்கும் துணை புரிவதற்கு அளிப்பதே இதன் நோக்கமாகும்.

தற்போது வளருகின்ற கார் உற்பத்தியாளர்கள் உயர் தொழில் நுட்பங்களை கொண்டுள்ள மேலைநாடுகளிலிருந்து நுட்பங்களை பெற வேண்டியுள்ளது. பல ஆண்டுகள் சர்வதேச கார் உற்பத்தியாளர்களின் மைய கவனத்தில் மாசுபாடுகள் இல்லாத கார்கள் இருந்தாலும், எதிர்காலப்பாணியாக மாறும் இக்கார்களின் உற்பத்தியில் முக்கிய உள்நாட்டு நிறுவனங்கள் மனமில்லாமல் இருந்தன. இவ்வாறு இயந்திர தொழில் உற்பத்தியில் பின்தங்கியதால் மாசுபாடு வெளியேற்ற அளவில் சர்வதேச தரக்கட்டுபாடான யூரோ 5 யை கொள்ளாமல் அதைவிட குறைவான ஐரோப்பிய தரக்கட்டுபாட்டு நிலையிலேயே தொடர வேண்டிதாயிற்று.

இந்நிலையில் மேற்கத்திய நாடுகளை பின்பற்றாமல் தற்சார்போடு சீனா செயல்படவேண்டுமென்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். "உலக கார் உற்பத்தியாளர்களால் பின்தங்கியதாக ஆக்கப்பட்ட சீனா, வளர்ந்துள்ள மேற்கத்திய நாடுகளை பின்பற்றி துன்பப்படுவதா? அல்லது மாற்றுப்பாதை காண்பதா என முடிவு செய்ய வேண்டும். சீன வாகன தொழில்துறை, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் சீன சிறப்பியல்களோடு வளர வேண்டுமென்று" தொங்ஜி பல்கலைக்கழக வாகனத்துறை நிர்வாகி யு சௌபிங் கூறியுள்ளார்.

சீனா பல ஆண்டுகளாக மிக முக்கிய மாற்று எரியாற்றல்களான மின்னாற்றல், கலவை எரிபொருள் மற்றும் எரிபொருள் மின்கலம் போன்ற மாற்று ஆற்றல்கள் கொண்ட வாகனங்களுக்காக 800 மில்லியன் யுவான் ஒதுக்கீடு செய்தது. அதே வேளையில் பிற நாடுகளில் மின்னாற்றல் கொண்ட வாகனகங்கள் சந்தைக்கு தயாராக இருந்தன. சீனர்கள் ஃபௌ டோயோட்டா வாகன நிறுவனத்தின் மாசுபாடு இல்லாத வாகனமான பிரியுஸ் காரை தான் வாங்க முடிகிறது. இல்லாவிட்டால் இவ்வாண்டு இறுதியில் விற்பனையாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் கலவை எரியாற்றல் காரான சிவிக் காருக்காக காத்திருக்க வேண்டும். உள்நாட்டு வாகன நிறுவனமான BYD மின்னாற்றல் மற்றும் கலவை எரியாற்றல் வாகனங்களை உற்பத்தி செய்கிறது.

மாசுபாடு இல்லாத வாகனகங்கள் பெட்ரோல் இயந்திரம் கொண்ட நடுத்தரமான காரை விட அதிகமான விலையை கொண்டிருப்பதாலும்;, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் மேல் எதிர்பார்க்கப்படும் வரி ஆகியவை எரிபொருளை அதிகமாக சேமிக்கும் மாசுபாடு இல்லாத கார்களின் சந்தையை உருவாக்கியுள்ளது. எரிபொருள் மின்கல தொழில்நுட்பமே எதிர்கால பாணியாகும் என இந்த திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட நிபுணர்கள் ஒத்துக்கொண்டாலும், அதிக விலை மற்றும் குறைந்த பயன்பாடு என்பது அதன் நடைமுறையாக்கத்தை குறைத்துள்ளது என்று குறிப்பிட்டனர். வியாபார நோக்கிலான ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய 5,000 மணிநேர பயன்பாட்டை விட, தற்போதைய எரிபொருள் மின்கலத்தின் பயன்பாடு 2,000 மணிநேரம் என்பது மிகவும் குறைவு. இதற்கான உற்பத்தி, போக்குவரத்து வசதி, எரிபொருள் சேமிப்பு, எரியாற்றல் மற்றும் ஹைட்ரஜன் வினியோகம் என்ற எரியாற்றல் வினியோக அமைப்பு முறை இன்னும் வளர வேண்டியுள்ளது.

சீன வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நவம்பர் முதல் நாளன்று மாற்று எரியாற்றல் வகனகங்களின் உற்பத்தி தேவையை குறிக்கும் புதிய சட்ட விதிமுறையை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொழில் முறையை முன்னேற்றும் கோட்பாடுகளை அது கொண்டிருக்கவில்லை. "உள்நாட்டு புத்தாக்கத்தின் வளர்ச்சிக்காக அரசு மானிய உதவி வழங்க வேண்டும்.; இத்துறையிலான அதிக ஒதுக்கீடு சரியான வழியில் செலவு செய்யப்பட அரசு கோட்பாடுகள வழிகாட்டும்" என்று பேராசிரியர் யு கூறியுள்ளார்.

சீனாவில் மாசுபாடு இல்லாத வாகனங்களை வளர்க்கும் தேசிய முயற்சி 1999 ஆம் ஆண்டு தொடங்கியது. மின்னாற்றல் வாகன தொழில் நுட்பத்திற்கு அது முக்கியத்துவம் அளித்தது. சீனாவின் தற்போதைய உயர் தொழில்நுட்ப திட்டமான "863 திட்டம்" மாசுபாடு இல்லாத வாகன வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதுவரை ஜப்பானை மையமாக கொண்ட டோயேட்டா நிறுவனம் நிக்கல்-ஹைட்ரஜன் மின்கலத்தை 2,300 கலவை மின்னாற்றல் வாகனங்களில் பொருத்தியுள்ளது. 2006 ஆம் ஆண்டு தியன்ஜினை மையமாக கொண்ட உள்நாட்டு நிறுவனம் 3,000 மின்னாற்றல் வாகனங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

சீனாவால் தொடங்கப்பட்டுள்ள மாசுபாடுகள் இல்லாத கார்களின் ஆய்வு முயற்சி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் மிக முக்கிய செயலாகும். எல்லா துறைகளிலும் தான் தொடங்கியுள்ள முயற்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு பயனை இலக்கு காலத்திற்கு முன் கூட்டியே சாதிக்கும் சீனா, மாசுபாடுகள் இல்லாத கார் உற்பத்தியை வெகு விரைவில் நனவாக்கி, உலகில் சிறப்பு மாற்று எரியற்றல் கொண்ட நாடாக திகழும் என்பது திண்ணம்.