• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-17 17:02:28    
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வீரர் ஆணையத்தின் உறுப்பினர்கள்

cri

சீனத் தடகள வீரர் liu xiang உள்ளிட்ட 31 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வீரர் ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக மாறுவர் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வீரர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் 10ம் நாள் தெரிவித்தார்.


வீரர் ஆணையத்தின் உறுப்பினரின் தகுதிக்கான போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில், 110 மீட்டர் தடையோட்ட போட்டியின் உலக சாதனையாளர் சீனாவின் liu xiang, பெல்ஜியத்தின் மகளிர் டென்னிஸ் வீராங்கனை ஜஸ்டின் Henin, ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீரர் கிராண்ட் Hackett ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
5 நாட்கள் நீடித்த 2007ம் ஆண்டு ரஷிய பூப்பந்து போட்டி, உள்ளூர் நேரப்படி 9ம் நாளிரவு நிறைவடைந்தது. 5 போட்டிகளில், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 3 தங்கப்பதக்கங்களை பெற்றனர். இளம் வீரர் lv yiயும் வீராங்கனை wang yi hanனும், ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை பெற்றனர்.


மகளிர் இரட்டையர் போட்டியில், சீன இணை du jing/yu yang, சீன தைபெய் இணையை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றது.
கலப்பு இரட்டையர் போட்டியில் சீன இணை he han bin/yu yang, போலந்து இணையிடம் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றது.
டிசெம்பர் 2ம் நாள் ஹாங்காங் பூப்பந்து போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் முடிவடைந்தன.
பிரபல சீன வீரர் lin dan 2-1 என்ற ஆட்டக் கணக்கில் மலேசிய வீரர் LEE Chong Weiயை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவர் காதலியான xie xing fang, மகளிர் ஒற்றையர் போட்டியில் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.