• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-18 10:16:52    
தீ தான் பூங்கா

cri

தீ தான் பூங்கா, பெய்ஜிங் மாநகரின் ஆன்திங்மென் வீதியின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. இதற்கும் யுங் ஹெ கொங் லாமா கோயிலுக்கும் இடையில், ஒரு ஆறு இருக்கிறது. 1990ம் ஆண்டில் நிறுவப்பட்ட பெய்ஜிங் மெழுகு தொல் பொருட்காட்சி நிலையம், தீ தான் பூங்காவிலுள்ள Zhaigong அரண்மனையில் இருக்கிறது. முன்பு, கோயிலின் வெளியே, சுமார் 9 லட்சத்து 84 ஆயிரத்து 500 சதுர மீட்டர் நிலப்பரப்பில் பாதுகாப்புச் சுவர் இருந்தது. இது, பெய்ஜிங் மாநகரின் தொல் பொருட் பாதுகாப்புப் பிரிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தீ தான் பூங்காவின் நிலப்பரப்பு, 37.4 ஹெக்டர் ஆகும். ஆண்டுதோறும், இங்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை, சுமார் 50 முதல் 60 லட்சம் ஆகும். இது, நீண்ட வரலாறு வாய்ந்த, புகழ்பெற்ற அரசக் குடும்பக் கோயில் தோட்டமாகும். இது, Fang Zetan எனவும் அழைக்கப்படுகிறது. 1530ம் ஆண்டு, இது கட்டியமைக்கப்படத் துவங்கியது. இது, மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தின் பேரரசர்கள், நிலத்தை வணங்கிய இடமாகும். நாட்டின் மிகப் பெரிய நிலத்தை வணங்கும் கோயிலுமாகும்.

தீ தான் கோயில் பூங்காவில், Fangzetan கோயில், Huangdishi அறை, Zhaigong அரண்மனை, Shenku களஞ்சியம் முதலிய பண்டைய கட்டிடங்கள் உள்ளன.

மேற்கு வாயில் மாளிகை, உயரமாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது. இது, சிங் வம்சகாலத்தின் Qian Long ஆளும் போது, கட்டியமைத்த தோற்றத்தைப் போல், மீண்டும் செப்பனிடப்பட்டது. கட்டுமான அளவு, பெய்ஜிங்கின் மாளிகைகளில், மிகப் பெரிதாக இருக்கிறது. பச்சை நிற மெருகிடப்பட்ட ஓடுகளால் போடப்பட்ட சுவர்களில், கோணிகஸ் மற்றும் பியோனி உருவங்கள் இருக்கின்றன. சுவரின் நடுவில், தீ தான் என்ற இரண்டு சீன எழுத்துக்கள் உள்ளன. இது, தீ தான் பூங்காவின் முக்கிய காட்சிகளில் ஒன்றாகும்.

Fangzetan கோயில், Baitai எனவும் அழைக்கப்படுகிறது. இது, பேரரசர்கள் நிலத்தை வணங்கிய முக்கிய கட்டிடமாகும். இதன் நிலப்பரப்பு, 17 ஆயிரத்து 689 சதுர மீட்டர் ஆகும். இரு மட்டங்களாகப் பரிக்கப்படுகிறது. இது, சீனாவிலுள்ள, ஏன் உலகிலுள்ள முதல் தரக் கோயிலாகும்.

தீ தான் பூங்கா முழுவதும், சீனாவின் பண்டைக் கால கட்டுமானக் கலையின் சிறப்பும் கம்பீரமும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.