நடுவண் தொழில் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு முறை சீர்திருத்தம்
cri
அடுத்த ஆண்டு சீனாவில் நடுவண் தொழில் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு முறை சீர்திருத்தம் விரைவாக நடைபெறும் என்று சீன அரசவையின் தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் தலைவர் Li Rong Rong கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற நடுவண் தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களது பணிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். நடுவண் தொழில் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு முறை சீர்திருத்தத்தில் பங்கெடுக்க, அரசு சாரா பொருளாதாரம், அன்னிய முதலீட்டு பொருளாதாரம் உள்ளிட்ட பல உடைமை முறை பொருளாதாரத்தை சீனா ஆக்கப்பூர்வமாக உட்புகுத்தும். நடுவண் தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு வெளிநாட்டு பங்கு பத்திரச் சந்தையில் நுழைவதற்கு ஊக்கமளிக்கும். நிபந்தனையுடன் கூடிய நிறுவனங்கள் சந்தையில் முழுமையாக நுழைய ஆதரவளிக்கும். சீனாவின் நடுவண் தொழில் நிறுவனங்கள், தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் கண்காணிப்புக்குள்ளான பெரிய ரக அரசு சார் தொழில் நிறுவனங்களாகும். இந்நிறுவனங்களில் பெரும்பாலானவை, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார உயிர்நாடி தொடர்பான முக்கிய துறைகளில் இடம்பெறுகின்றன.
|
|