• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-18 16:54:07    
சீனாவில் பழைய செல்லிடபேசியின் மறு சுழற்சி பணி

cri

அன்புள்ள நேயர்களே, சீனப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியுடன், பல்வகை மின்னணு உற்பத்தி பொருட்கள் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு கழிவு பிரச்சினை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் செல்லிடபேசி, உரிய முறையில் மறு சுழற்சி செய்ய முடியாமல் போனால், சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்தும். இன்றைய நிகழ்ச்சியில் கழிவுச் செல்லிடபேசிகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் தவிர்க்கும் நடவடிக்கையான பசும் பெட்டி என்னும் திட்டம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.


சீனத் தகவல் தொழில் அமைச்சின் மிகப் புதிய புள்ளிவிவரங்களின் படி, தப்போது சீனாவில் செல்லிடபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 48 கோடியை எட்டியுள்ளது. உலகில் மிக அதிக செல்லிடபேசி பயன்படுத்துவோர் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது. செல்லிடபேசியின் புதுப்பிப்பு வேகம் அதிகரிப்பதுடன், கழிவுச் செல்லிடபேசியின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கழிவுச் செல்லிடபேசியும் அதன் பாகங்களும் சாதாரண கழிவுப்பொருள் போலவே வாழ்க்கை குப்பைகளுடன் சேர்ந்து கையாளப்படுகின்றன. கழிவுச் செல்லிடபேசியும் இதன் மின்கலங்களும் புதைக்கப்பட்டால், இவற்றில் உள்ள தங்கம், பாதரகம், ஈயம் முதலிய கரைக உலோகப் பகுதி, மண் மற்றும் நிலத்தடி நீரை நேரடியாக மாசுபடுத்தும். எளிதாக எரிந்தால், இவற்றின் வாயு, காற்றை மாசுபடுத்தி, மனிதரின் உடலுக்கு நச்சு ஏற்படுத்தி, உடல் நலத்துக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும்.


ஆகையால், கழிவுச் செல்லிடபேசி, மீள் மின்னூட்டிகள், மின்கலம் ஆகியவற்றின் மறு சுழற்சி பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் அமைப்புமுறையை உருவாக்குவது தற்போதைய அவசர கடமையாக மாறியுள்ளது. சீனாவின் மிக பெரிய செல்லிடபேசிச் செய்தி தொடர்பு நிறுவனமான சீனச் செல்லிடபேசிச் செய்தி தொடர்பு குழுமம், மொடொரோலா, நோக்கியா உள்ளிட்ட சில முக்கிய செல்லிடபேசி உற்பத்தி கூட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து பொது நல தன்மை வாய்ந்த பசும் பெட்டி என்னும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இக்குழுமத்தின் துணைத் தலைமை இயக்குநர் sha yue jia கூறியதாவது


கழிவுச் செல்லிடபேசிகளைத் திரும்பப் பெறுவது, நிர்வகிப்பது மற்றும் உரிய முறையில் பயன்படுத்துவது என்பது, சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூகத்தை உருவாக்குவதற்கான தேவையாகும். இது மட்டுமல்ல, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் சமூகத்தை உருவாக்குவதற்கான தேவையும் ஆகும். கழிவுப் பொருட்களைத் திரும்பப் பெறும் பணியை மேலும் வலுப்படுத்த குழுமம் உணர்வுப்பூர்வமாக வாக்குறுதி அளித்துள்ளது. மென்மேலும் அதிகமான உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இந்த பசும் பெட்டி திட்டத்தில் ஈடுபட்டு, மனிதர் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பங்கு ஆற்ற வரவேற்கின்றோம் என்றார் அவர்.


இத் திட்டம் சீனாவின் 40 முக்கிய நகரங்களில் பரவல் செய்யப்பட்டுள்ளது. சீனச் செல்லிடபேசி செய்தித் தொடர்பு குழுமத்தின் சுமார் 1000 விற்பனை கிளைகள், மோடோரோலா மற்றும் நோக்கியாவின் சுமார் 300 விற்பனை மையங்கள் பழுது சேவை மையங்கள் ஆகியவற்றில், கழிவுச் செல்லிடபேசிகளையும் இதன் பாகங்களையும் திரும்பப் பெறும் நிலையான பசும் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.