• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-18 17:01:27    
35வது தலைமுறை இந்திய ஷாவேர்லின் வீரர்

cri

உலகில் ஆசிய நாடுகளின் வீரவிளையாட்டுக்கள் தனிச்சிறப்புப் பெற்றுள்ளன. அவற்றில் தனித்தன்மை வாய்ந்த இரண்டு மாபெரும் நாகரிகங்களின் பிரதிநிதிகளான இந்தியாவும், சீனாவும் பண்டைக்காலந்தொட்டே பாரம்பரியச் சிறப்புமிக்க வீரவிளையாட்டு வகைகளை உருவாக்கியுள்ளன. சிலம்பு, வாள்வீச்சு, களரிப் பாயாட்டு, சுருள் வீச்சு, குத்துச்சண்டை, மற்போர், வில்வித்தை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு உடல் வலிமை மட்டுமல்ல, மன உறுதியும் தேவைப்படுகின்றது. எனவேதான், ஒரு தவம் இருப்பது போல, கவனம் சிதறாமல், கருமமே கண்ணாக இருந்து இந்தப் போர்க்கலையை இளைஞர்கள் குழந்தைப் பருவந்தொட்டே பயின்று வந்தனர்.


ஆசிய நாடுகளில் இந்த போர்க்கலையை பயிற்றுவிப்பதில் கோயில்களும், மடங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. துறவிகளும், குருமார்களும் பக்தியை மட்டுமல்லாது, வீரவிளையாட்டுக்களையும் பயிற்றுவித்து பரப்பினார்கள். ஒருவகையில் மதத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கேடயம் போலவும் இந்த வீரவிளையாட்டுகள் கை கொடுத்தன. அந்த வகையில், சீனாவின் Shao Lin கோயிலுக்கு உலக விளையாட்டு வரலாற்றில் தனி இடம் உண்டு.
சீனாவின் ஹெனான் மாநிலத்தில், ஷென்ஷோ நகருக்கு அருகே அமைந்துள்ள Shao Lin கோயிலிலும், அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள பள்ளிகளிலும் பயிற்றுவிக்கப்படும் வூ ஷு என்ற வீரவிளையாட்டு உலகப் புகழ் பெற்றது. இதை ஆங்கிலத்தில் குங்புஃ என்பார்கள். மலைகளிலும், காடுகளிலும் கடுமையாகத் தவமிருந்து தியானம் செய்யும் பெளத்த துறவிகளுக்கு, உடல் நிலை நலிவடைந்து, கவனம் சிதறியதால், அவர்களுக்கு உடம்பில் வலிமை சேர வேண்டும் என்பதற்காக, இந்த வூ ஷு விளையாட்டை உருவாக்கியவர் தாமோ முனிவர். இந்தியாவில் இருந்து சென்ற தம்மபாலர் என்ற துறவிதான் தாமோ என்று சீன மொழியில் அழைக்கப்படுகிறார். இன்றைக்கும் ஷாவோலின் கோயிலின் முற்றத்தில் தாமோ முனிவருக்கு பிரம்மாண்டமான சிலையை நிறுவி, சீன மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள். ஷாவோலின் தோயிலில் இரண்டு உலக வூ ஷு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளனர்.

வூ ஷு விளையாட்டில் பலவகைகள் உள்ளன. ஆயுதம் ஏதுமின்றி கைகளாலும், கால்களாலும் சண்டையிடுவது, வாள்வீச்சு, கம்பு வீச்சு, ஈட்டிவீச்சு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வூ ஷு விளையாட்டுக்களில் வல்லவராக ஓர் இந்தியர் இளைஞர் இருக்கிறார். அவர்தான் கஜானந்த் ராஜ்புத். இவரை ஷாவோலின் கோயிலின் 35வது தலை முறை வீரர் என்று கூறுகிறார்கள். உண்மையில், 35வது தலைமுறை ஷாவோலின் வீரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு இந்தியர் இவரே. ஈ எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காதவர் என்று நினைக்கத் தோன்றும் காதுவான ஒரு தோற்றம். ஆனால், தம்மைவிட இருமடங்கு தடியான முரடர்களைக் கூட ஒரே குத்தில் வீழ்த்தும் திறமை பெற்றவர் இந்த 28 வயது இளைஞர். இவருக்கு ஒரு சீனப் பெயரும் உண்டு. அது தான் ஷி ஹெங் சாங். "நீண்டகால உறவினர்" என்பது இதன் பொருள். 15 ஆண்டுகளுக்கு முன்பு Wu Shu விளையாட்டுக்களில் தேர்ச்சி பெறுவதற்காக Shao Lin. கோயிலுக்கு கஜானந்த் ராஜ்புத் சென்ற போது, அவருடைய குரு இந்த சீனப் பெயரைச் சூட்டினார். ஒரு பொழுது போக்காகத் தான் இவர் Wu Shu கலையைக் கற்றார். இப்போது, இரு தொழிலாக மட்டுமல்ல, இவருடைய வாழ்நாள் லட்சியமாகவும் மாறி விட்டது. இப்போது, இந்தியப் போர்க்கலை ஆணையத்தின் பொதுச் செயலராகவும் இருக்கிறார். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள சர்வதேச விளையாட்டு மற்றும் போர்க்கலை அறிவியல் பல்கலைக்கழகத்தில் Wu Shu பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்தியாவில் பல சீடர்களுக்கும் Wu Shu கலையை கற்றுத் தருகிறார். பல தொலைக் காட்சித் தொடர்களுக்கும், திரைப் படங்களுக்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துக் கொடுக்கிறார்.

'நான் சீனாவில் பயின்ற போது 4 வயது முதல் 80 வயது வரையிலானவர்கள் Wu Shu போர்க்கலையில் ஈடுபடுவதைக் கண்டேன். இந்தியாவிலும் அதே போன்ற தீவிரத்துடன் போர்க்கலைப் பயிற்சியைப் பரப்ப வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் போர்க்கலைப் பயிற்றுவிக்கப்படும் ஒரு நாள். வர வேண்டும் என்பதே எனது கனவு என்று கூறுகிறார். 35வது தலைமுறை. ஷாவோலின் வீரர் கஜானந்த் ராஜ்புத்'
இவரைப் போன்ற ஈடுபாடு மிக்கவர்கள் மிகுந்திருக்கும் போது, கனவு நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.