• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-19 16:23:03    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான போக்குவரத்து சேவை

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்சிங்கின் போக்குவரத்து சேவை உத்தரவாதத்தைப் பெறும். பெய்சிங் ஒலிம்பிக் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பெய்சிங் மாநகராட்சி போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைவர் Liu Xiaoming இவ்வாறு கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தும் நேரத்துடன் இணைந்து, தற்போதைய பொதுப் போக்குவரத்து முறைமையின் செயல்பாட்டு நேரம் சரிப்படுத்தப்படும். சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் நகரவாசிகளுக்கும் சேவைபுரியும் வகையில், 24 மணி நேர பொதுப் போக்குவரத்து வலைப்பினலை பெய்சிங் மாநகராட்சி அமைக்கும் என்று Liu Xiaoming கூறினார். தவிர, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல சிறப்பு நெறிகளைப் பெய்சிங் உருவாக்கியுள்ளது. இந்தச் சிறப்பு நெறிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றியமையாத தேவைகளை மக்களுக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சுமார் 6 இலட்சம் வீரர்கள், ஆட்ட அதிகாரிகள், வெளிநாட்டு ரசிகர்கள் பார்வையாளர்கள் ஆகியோர்களை பெய்சிங் வரவேற்று உபசரிக்கும் என்று அறியப்படுகின்றது.

2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன், பெய்ஜிங்கிலுள்ள சுற்றுலா இடங்களில், பல மொழிகளிலான 30 ஆயிரம் வழிக்காட்டு வசதிகள், பயன்படுத்தப்படும் என்று பெய்ஜிங் சுற்றுலாப் பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.

தற்போது, பெய்ஜிங்கின் 35 சுற்றுலா இடங்களில் சீன மற்றும் ஆங்கில மொழிகளிலான 8000 வழிக்காட்டு வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று இப்பொறுப்பாளர் தெரிவித்தார்.
இவ்வசதிகள் அடங்கிய மொழிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன் இவ்வசதிகள், கூடுதலாக 44 மொழிகளில் பயணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று இப்பொறுப்பாளர் கூறினார்.