• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-20 15:54:59    
Qing long பள்ளதாக்கு

cri

Qing long பள்ளதாக்கு, பசுமையான மலைகள், தெளிந்த நீர், பழம் பெரும் சுவர் வாய்ந்த இயற்கைக் காட்சி மண்டலமாகும். இது, பெய்சிங் புறநகரின் சமவெளிகள் மற்றும் மலை பிரதேசம் இணைந்த பகுதியாகும். இக்காட்சி மண்டலத்தின் இரு புறங்களும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. நடுவில் நீர் நிறைந்துள்ளது. Qing long பள்ளதாக்கு, 150 ஹெக்டர் பரப்பளவு கொண்டது.

வடக்கு-தெற்கிலான ஒடுங்கியப் பிரதேசம், 10க்கு மேற்பட்ட மீட்டராகும். இதில், Ming காலப் பெரும் சுவரின் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள் உள்ளன. பெரிய மகத்தான புகழ் வாய்ந்த இப்பள்ளதாக்கு, இருப் பகுதிகளைப் பிரிக்கின்றது. இதன் மேல்பகுதிக்கு படகில் செல்லாம். அதன் பரப்பளவு, சுமார் 0.6 சதுர கிலோமீட்டராகும். நீர் சேமிப்பளவு, 1 கோடியே 48 இலட்சம் கன மீட்டராகும். மிக ஆழமான நீர் மட்டம், 50 மீட்டராகும்.

1998ம் ஆண்டு மே திங்கள் 3ம் நாள் காலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆணைய தலைமைச் செயலாளரும் சீன மக்கள் குடியரசுத் தலைவருமான Jiang Zemin, அவரது மனைவி wang yeping, பெய்சிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் jia qinglin ஆகியோர், Qing long பள்ளதாக்கில் சுற்றுலாச் சென்றனர். அப்போது, "Jiang Zemin, 1998ம் ஆண்டு huai rou பிரதேசம் Qing long பள்ளதாக்கு"என்ற குறிப்பை Jiang Zemin, தான் சென்றதன் நினைவாக அங்கு எழுதியுள்ளார். 1996ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை, இப் பள்ளதாக்கில், கேபிள் கார் பயணம், கயிற்றை காலில் கட்டிகுதித்தல், மலை ஏறுதல், கிளைடர் எனப்படும் மிதவை வானுர்தி பயணம், ஊஞ்சலாடுவது போன்ற சாகசங்களை அனுபவித்து மகிழலாம்.

2001ம் ஆண்டு, இப் பள்ளதாக்கு, சீனத் தேசிய நிலையான இயற்கைக் காட்சி மண்டலம், சீனத் தேசிய நீர் சேமிப்பு இயற்கைக் காட்சி மண்டலம் என அழைக்கப்பட தொங்கியது. இதில், பல்வேறு சேவை வசதிகள் உள்ளன. இதன் நாலா பக்கமும் வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட அமைதியான கட்டடம் இருப்பது மட்டுமல்ல, உணவகம், விடுதி, கூட்டம் நடத்தும் அறைகள் என வசதிகள் வாய்ந்த ஒட்டுமொத்த மாளிகை உள்ளது. சுற்றுலாப் பயணிகள், அருமையான உள்ளூர் hong zhun மீன் வகைகளைச் சாப்பிடலாம். இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே சுவையான மீனையும் உண்டு மகிழலாம்.