அடுத்த சில ஆண்டுகளில், உலக நிலை சுற்றுலாப் பிரதேசமாக மாறுவதற்கு, திபெத் பாடுபடுவதோடு, புத்தாக்க சுற்றுலா உற்பத்திப் பொருட்களின் அமைப்பு முறையில் புதிய முன்னேற்றமடைய முயல்கிறது என்று, அண்மையில் நடைபெற்ற திபெத் சுற்றுலா தொழில் துறை வளர்ச்சி மாநாட்டிலிருந்து எமது செய்தியாளர் அறிந்து கொண்டார்.
இவ்வாண்டு, திபெத்திற்கு வருகை தந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டை விட, 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுற்றுலா மூலமான மொத்த வருமானம், 480 கோடி யுவானை எட்டியது. சுற்றுலாத் துறை, திபெத் தேசிய பொருளாதாரத்தில் முதுகெலும்பு போன்ற தொழில் துறையாக மாறியுள்ளது.
|