திபெத்தில் முக்கிய தொல் பொருட்காளுக்கான பாதுகாப்பு
cri
திபெத்தில் போத்தலா அரண்மணை, ரோபுலின்கா பூங்கா, சாக்கா கோயில் ஆகிய 3 முக்கிய தொல்பொருட்களுக்கான பராமரிப்புப் பணி அடிப்படையில் நிறைவேறியுள்ளது என்று சீனத் தேசிய தொல் பொருள் ஆணையத்தின் தலைவர் Shan ji xiang கூறினார். இன்று நடைபெற்ற சீனத் தொல் பொருள் துறைத் தலைவர்களின் பணிக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தத் திட்டப்பணிகளில் அரசு மொத்தம் 33 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார். போத்தலா அரண்மனை கி.பி 700ம் ஆண்டுகளில் கட்டியமைக்கப்படத் துவங்கியது. ரோபுலின்கா பூங்கா 1751ம் ஆண்டு, கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில், கட்டியமைக்கப்பட்டது. சாக்கா கோயிலில் பல புத்த மத மறைகளும் அரிய தொல் பொருட்களும் உள்ளன.
|
|