• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-20 16:46:30    
திபெத்தில் உலக நிலை சுற்றுலா மண்டலங்களின் உருவாக்கம்

cri

ஜொல்மோ லுங்மா சிகரம்

அடுத்த சில ஆண்டுகளில், திபெத்தில் உலக நிலை சுற்றுலா மண்டலங்களை உருவாக்க திபெத் தன்னாட்சி பிரதேச அரசு பாடுபடும். அண்மையில் நடைபெற்ற திபெத் சுற்றுலா தொழில் வளர்ச்சி மாநாட்டிலிருந்து கிடைத்த தகவல் இதை உறுதிபடுத்துகிறது.
உலகில் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரம், உலகில் மிக பெரிய Ya Lu Zang Bu பள்ளத்தாக்கு உள்ளிட்ட சிறந்த சுற்றுலா வளங்கள், திபெத்தில் உலக நிலை சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான அடிப்படையை இட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncog கூறினார்.
சிங்காய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது, திபெத் சுற்றுலா வளர்ச்சியைத் தடை செய்த போக்குவரத்து சிக்கலை முற்றிலும் முடியறித்துள்ளது. உள் நாட்டு பயணிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு இருப்புப்பாதை மூலம் திபெத்துக்குள் நுழைந்து, இங்கிருந்து புறப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை, 15 லட்சத்து 90 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுற்றுலா வாரியத்தின் மதிப்பீட்டின் படி, இவ்வாண்டு திபெத்துக்கு வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 40 லட்சத்தை முதன்முறையாகத் தாண்டக்கூடும்.