• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-20 18:04:35    
சட்டத்தை முழுமையாக்கும் சீனா

cri

கலை..........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

தமிழன்பன்.......ஆமாம். பிரியமான நேயர்களுடன் குறிப்பிட்ட சில தலைப்புகளை பற்றிய விளக்கங்கள் பெறுவதை மிகவும் விரும்புகின்றேன். இது மகிழ்ச்சிக்ருரிய விடயமாகும்.

கலை..........தற்போதைய பொருளாதார சமூக சூழலில் எரியாற்றல் சிக்கனம் என்பது சமூக தன்மை வாய்ந்த மிக முக்கிய பிரச்சினையாகும்.

தமிழன்பன்........ எரியாற்றல் சிக்கனம் நன்றாக கையாளப்பட்டால் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தும். சரிதானே.

கலை.......ஆமாம். கட்டுப்பாட்டான எரியாற்றல் அளவை முழுமையாக பயன்படுத்தினால் அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த நன்மை தரும். முழு சமூகத்திலும் எரியாற்றல் சிக்கனத்தை முன்னேற்றி அதன் பயன்பாட்டு பயனை உயர்த்தும் வகையில் சீன அரசு அக்டோபர் திங்கள் 28ம் நாள் எரியாற்றல் சிக்கனம் பற்றிய சட்டத்தை வெளியிட்டுள்ளது.

தமிழன்பன்.......ஒரு நாட்டின் நெடுநோக்குத் திட்டத்திற்கு இது மிக சிறந்த முயற்சியாகும். இச்சட்டம் பற்றி நேயர்களுக்கு கூடுதலாக விளக்கிக் கூறலாமே.

கலை........நல்ல யோசனை.

தமிழன்பன்.......இச்சட்டம் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

கலை.........சரி. இச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதன் மூலம் எரியாற்றல் சிக்கனம் நன்றாக கடைப்பிடிக்கப்பட்டு தேசிய பொருளாதார வளர்ச்சி பாதுகாக்கப்படும்.

தமிழன்பன்......உங்கள் கருத்து முற்றிலும் உண்மையானது. நடப்பு சட்டத்துடன் தொடர்புடைய துறைகள் எவை?

கலை....... கட்டிடத் துறை, போக்குவரத்து துறை, அரசு வாரியங்கள் ஆகியவற்றில் எரியாற்றல் சிக்கன பணி சட்டத்தின் வரையறையில் சேர்க்கப்படுகின்றன.

தமிழன்பன்........அப்படியிருந்தால், என்னென்னந்த விளைவுகளை நாம் எதிர்பார்க்கலாம்?

கலை........இதன் மூலம் எரியாற்றல் சிக்கனம் தொடர்பான பல நிர்வாக அமைப்பு முறைகளும் ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளும் முழுமையாக்கப்பட்டுள்ளன.

தமிழன்பன்........சீனப் பொருளாதாரம் எரியாற்றல் சிக்கனம் வாய்ந்த வடிவத்தில் வளர்வதென்ற நோக்கம் நிறைவேற்றப்படும்டு.

கலை.......ஆமாம். தற்போது உலக முழுவதிலுமான பொருளாதார வளர்ச்சிக்கும் எரியாற்றல் வளம் மற்றும் சுற்றுசூழலுக்கும் இடையிலான முரண்பாடுகள் நாள்தோறும் தீவிரமாகிவருகிறது. விரைவாக வளர்ச்சியடையும் சீனாவும் இதிலிருந்து தப்பிக்க முடியாது.

தமிழன்பன்.......தற்போது சீனாவில் எரியாற்றல் செலவு அதிகரித்துள்ளது. அதன் நுகர்வும் உயர்வடைந்துள்ளது.

கலை........இந்நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக எரியாற்றல் சிக்கனம் சீனாவின் அடிப்படை கொள்கையாக கருதப்பட்டுள்ளது.

தமிழன்பன்........ஆமாம். 2010ம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் எரியாற்றல் செலவை 20 விழுக்காடு குறைப்பதென்ற குறிக்கோளை சீன அரசு முன்வைத்துள்ளது.

கலை.......5 திங்களுக்கு முன் எரியாற்றல் சிக்கனம் தொடர்பான சட்ட திருத்தம் பரிசீனைக்காக சட்டமியற்றல் நிறுவனமான சீனத் தேசிய மக்கள் பேரவையிடம் சமர்பிக்கப்பட்டது. இது பற்றி சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிதி ஆணையத்தின் தலைவர் புச்சுகவான் கூறியதாவது.

தமிழன்பன்.........சீனாவின் நிலைமை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றின் தேவையின் படி எரியாற்றல் சிக்கனம் சீனாவின் நீண்டக்கால கோட்பாடாகும். சளையாத முறையில் இதில் ஊன்றி நிற்க வேண்டும். ஆகவே இது தொடர்பான சட்டத்தை திருத்தும் போது தற்போதைய தீவிர பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நீண்ட கால அமைப்பு முறையின் வரையறையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கலை........இதற்காக தான் சீன அரசின் கவனத்துடன் பத்து ஆண்டுகளுக்கு முன் வகுத்த எரியாற்றல் சட்டத்தை திருத்த முயற்சித்துள்ளது.

தமிழன்பன்....... எனக்கு தெரிந்தவரை ஏற்கனவேயுள்ள சட்டத்தின் ஒவ்வொரு விதியிலும் திருத்தம் காணப்படுகின்றது. ஒவ்வொரு மாற்றங்களும் வழிக்காட்டல் தன்மை வாய்ந்தது.

கலை.......நீங்கள் குறிப்பிட்டது உண்மைதான். இதில் இரண்டு முக்கிய மாற்றங்கள் உள்ளன.

தமிழன்பன்.......அதனை இன்னும் தெளிவாக குறிப்பிடுங்களேன்?

கலை.......மகிழ்ச்சி. ஒன்று சட்டரீதியான சீர்திருத்தம் விரிவாக்கப்ப்டடுள்ளது. இன்னொன்று சட்டத்தின் கட்டாய தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரச்சார மொழி குறைந்துள்ளது. தொடர்புடைய விதிகள் மேலும் தெளிவாகவும் வலுமையாகவும் வகுக்கப்பட்டுள்ளன. ஊக்கம் மற்றும் தண்டனை நடவடிக்கைகள் மேலும் விபரமாக வகுக்கப்பட்டுள்ளன.

தமிழன்பன்.........கலை இத்தகைய மாற்றத்தில் எத்துறையில் அதிக மாற்றம் ஏற்படும்?இது பற்றி குறிப்பிடலாமா?

கலை.......இம்முறையான திருத்தத்தில் பெரிய மாற்றங்கள் காணும் துறைகள் நிகழ்ச்சியின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட கட்டிடத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் பொது வாரியங்களாகும். அவற்றின் எரியாற்றல் சிக்கன பணி சட்டத்தின் வரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழன்பன்........இதில் எவ்வகை வரையறைகள் உள்ளன?

கலை........பல முக்கிய எரியாற்றல் சிக்கன அமைப்பு முறைகளும் நிர்வாக நடவடிக்கைகளும் வரையறையில் இடம் பெறுகின்றன.

தமிழன்பன்........சற்றே விளக்கமாக குறிப்பிடுங்கள்.

கலை.......துறையின் எரியாற்றல் சிக்கன திட்டம், எரியாற்றல் சிக்கன வரையறைகள், பொது வாரியங்களில் எரியாற்றல் சிக்கன குறிக்கோளுக்குப் பொறுப்பான அமைப்பு முறை, எரியாற்றல் செலவின் கட்டுப்பாட்டு அளவு ஆகியவை எரியாற்றல் சிக்கன திருத்த சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றி புச்சுவான் கூறியதாவது

தமிழன்பன்........இவ்வரையறைகளும் நிர்வாக வழிமுறைளும் வகுக்கப்பட்டு முழுமையாக்கப்பட்ட பின் எரியாற்றல் செலவு அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும். அதிகளவில் எரியாற்றல் செலவிட வேண்டிய உற்பத்திப் பொருட்களும் சாதனங்களும் நீக்கப்படும் வேகம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக தேசிய பொருளாதாரம் எரியாற்றல் சிக்கனம் கொண்ட சுற்று சூழல் பாதுகாப்பு வளர்ச்சி திசையை நோக்கி வளர்கின்றது என்றார் அவர்.

கலை.......இருந்தாலும் இன்னல்கள் மற்ற பிரச்சினைகள் ஆகியவை அதிகமாக இருந்ததால் 2006ம் ஆண்டின் துவக்கத்தில் உறுதிபடுத்தப்பட்ட எரியாற்றல் சிக்கன குறிக்கோளை சீனாவால் நிறைவேற்ற முடிய வில்லை.

தமிழன்பன்..........அதற்கு முக்கிய காரணங்களாக எதை நினைக்கிறீர்கள்?

கலை........கட்டாயமில்லாமை,கட்டுப்பாடு மற்றும் தண்டனை அமைப்பு முறை பலவீனம் என்பன இதன் முக்கிய காரணங்களாகும்.

தமிழன்பன்.......இந்த குறைகளை நீக்கும் வகையில் நடப்பு சட்டத் திருத்தில் இது பற்றிய கட்டாயம் அதிகரித்துள்ளதா?

கலை.........கட்டாயம் மிகவும் அதிகரித்துள்ளது.

தமிழன்பன்.......இது பற்றி தெளிவாக குறிப்பிடுங்கள்.

கலை......... சட்ட திருத்தத்தில் வகுக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் படி நடுவண் அரசு நிலையிலுள்ள வாரியங்கள் எரியாற்றல் சிக்கன பணிக்கு தலைமை பங்கையும் ஒன்றிணைக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும். பல்வேறு நிலை எரியாற்றல் சிக்கன நிர்வாக வாரியங்களின் பொறுப்பும் முறைமைப்படுத்த வேண்டும்.

தமிழன்பன்........கட்டாயம் தவிர வேறு விதிமுறைகள் அதிகரித்துள்ளதா?

கலை.........ஆமாம். எரியாற்றல் சிக்கனத்தை பயன்தரும் முறையில் செயல்படுத்தாததால் ஏற்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் 8 இலிருந்து 18ஆக அதிகரித்துள்ளன. உண்மைக்குப் பொருந்தாத எரியாற்றல் பயன்பாடு பற்றிய அறிக்கை எரியாற்றல் சிக்கன விதியை மீறும் செயல்கள் ஆகியவை உறுதிபடுத்தபப்ட்ட பின் தொடர்புடைய தண்டனை அதிகரிக்கும்.

தமிழன்பன்......... சட்ட திருத்தத்தில் வேறு விதிகள் உண்டா?

கலை........உண்டு. எரியாற்றல் சிக்கன குறிக்கோளை நிறைவேற்றுவது என்பது உள்ளூர் அரசுகள் மற்றும் அரசின் பொறுப்பாளர்களின் ஆண்டின் பணியை மதிப்பீடு செய்யும் அம்சங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றி சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிதி பொருளாதார ஆணையத்தின் துணை தலைவர் லீ மின் ச்சு கூறியதாவது

தமிழன்பன்.........முன்பு பொருளாதார அதிகரிப்பு வேகம் நிதி வருமானம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தினோம். இப்போது அறிவியல்பூர்வ கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை பெரிதென கருதி முழுமையான ஒன்றிணைப்பு வாய்ந்த தொடரவல்ல வளர்ச்சியை வற்புறுத்த வேண்டும். 11வது ஐந்தாண்டு திட்டத்தில் தேசிய எரியாற்றல் சிக்கனமும் பல இடங்களில் உள்ளூர் எரியாற்றல் சிக்கன குறிக்கோளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த எரியாற்றல் சிக்கனம் ஊழியர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் அமைப்பு முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. எரியாற்றல் சிக்கனம் சட்ட நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எரியாற்றல் சிக்கனத்தில் பெரிதும் முன்னேற்றம் காணப்படும் என்று லீ மின் ச்சு கூறினார்.

கலை........திருத்தப்பட்ட எரியாற்றல் சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும். சீனாவின் பல துறைகள் பிரதேசங்கள் ஆகியவற்றை பொறுத்தவரை எரியாற்றல் சிக்கனம் தொடர்பான புதிய சட்டம் பல துறைகளின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை கொண்டு வருவதுடன கடும் சோதனைகளையும் அறைகூவல்களையும் கொண்டுவரும்.

தமிழன்பன்.......இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் எரியாற்றல் சிக்க அமைப்பு முறையை முழுமையாக்கும் வகையில் சீனா இது தொடர்பான சட்டத்தை திருத்துவது பற்றி கேட்டீர்கள்.

கலை.............இன்றைய நிகழ்ச்சியின் மூலம் சீனாவின் வளர்ச்சி போக்கில் சட்டரீதியில் மேற்கொண்ட முயற்சி பற்றி நீங்கள் குறிப்பிட்ட அளவில் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.

தமிழன்பன்.........கேட்ட புரிந்து கொண்ட கருத்துக்களை பற்றி சில வரிகளில் எங்களுக்கு எழுதி தெரிவியுங்கள்.