உலகச் சுற்றுலா அமைப்பு சீன மொழியை தனது அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழியாக ஏற்றுக்கொள்ள உள்ளது. ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனெஸ்கோ ஆகிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் சீன மொழி அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழியாக உள்ளது. இந்நிலையில் ஐநாவைச் சேர்ந்த உலகச் சுற்றுலா அமைப்பும் சீன மொழியை தன் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழியாய் இணைக்கவேண்டும் என்று சீனா வலியுறுத்தி வந்தது. சீன மொழியியை தன் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழியாய் உலகச் சுற்றுலா அமைப்பு ஏற்றுக்கொள்வது, சீனாவை சர்வதேச சுற்றுலா விவகாரங்களில் ஊக்கமுடன் பங்காற்ற வழி செய்யும் என்று சீனத் தேசிய சுற்றுலா பணியகம் கூறுகிறது.
அரதப் பழசான ரோல்ஸ் ராய்ஸ் கார்

பிரிட்டன் நாட்டில் 1905 முன்பாக தயாரிக்கப்பட்ட ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் அண்மையில் 3.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனதாக அறியப்படுகிறது. 35 லட்சம் பவுண்ட் என்பது
இதுவரையிலான மிக அதிக மதிப்பு கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காராகவும், 1905 ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மிக அதிக விலை மதிப்பான காராகவும் இதை மாற்றியுள்ளது. ரோல்ஸ் என்பவரும் ராய்ஸ் என்பவரும் கூட்டாக கார்களை தயாரிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தை சேர்ந்தது இந்த கார் என்பதும், லண்டன் முதல் பிரைட்டன் வரையான 1954ம் ஆண்டில் நடைபெற்ற பழமையான கார்களின் காரோட்டத்தில் கலந்து கொண்ட 1905க்கு முன்பாக தயாரான ஒரே கார் என்பதும் இந்த காருக்கு மேலும் பெருமை சேர்த்து ஒரு உலக சாதனை விலையை பெற்றுத் தந்துள்ளது எனலாம்.
இதற்கு முந்தைய அதிக விலை பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார் 1912 தயாரானது, அந்த கார் 30 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் போனது. இது வரை 6 உரிமையாளர்களை சந்தித்த இந்த அரதப் பழசான ஆனால் இன்றைக்கு விலை மதிப்பான கார், தற்போது ஒரு கார் சேகரிப்பாளருக்கு உரிமையாகியுள்ளது.
பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கார்
அரதப்பழசான காருக்கு அவ்வளவு விலை. அதை விடுப்போம், பொதுவாக திருமணங்களின் போது ஊர்வலமாக செல்லவும், அல்லது திருமணம் முடித்து மணமக்கள் வீடு திரும்பவும் பொதுவாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கார்களை ஒன்றேல் வாடகைக்கு அமர்த்துவது அல்லது சொந்த காரையே மலர்களால் அலங்கரிப்பது வழமையாக காணப்படுகிற ஒன்று அல்லவா. இரு மணங்கள் இல்லறத்தில் இணையும் மகிழ்ச்சியான, மங்கலமான ஒரு நிகழ்வான திருமணத்தை மலர்களால் செய்யப்படும் அலங்காரம் உணர்த்துகிறது. ஆனால் அண்மையில் சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் வென்ஷோ நகரில் ஒரு திருமணத்திற்காக கார்கள் மலர்களுக்கு பதில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்த்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாம். மணம்மக்கள் தவிர்த்து திருமண விழாவில் கலந்துகொண்ட அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களின் கார்களும் திராட்சை, வாழைப்பழம் முதலிய கனிகளால் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் யுவான் செலவழித்து மலர்களை வாங்கி அதை நாசம் செய்வதை விட, கார்களை லங்கரித்த பழங்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக தருவது நல்ல யோசனைதானே என்று கேட்கிறார் மணப்பெண் சென். மொத்தம் 12 கார்களில் அலங்காரமாய் பொர்த்தப்பட்டிருந்த மழங்களின் மொத்த எடை 150 கிலோ. கனிதரும் உறவை குறிப்புணர்த்தும் வகையிலும் இந்த கனிகளால் செய்யப்பட்ட அலங்காரம் அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இயற்கை ஏழு அதிசயங்கள்
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் கடந்த ஜூலை திங்களில் அறிவிக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். சீனப் பெருஞ்சுவரும், இந்தியாவின் தாஜ் மகாலும் இடம்பெற்ற இந்த புதிய ஏழு அதிசயங்கள் என்ற பட்டியல் ஒரு தனியார் அமைப்பால் நடத்தப்பட்ட பொது மக்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெர்னார்ட் வெப்பர் என்ற ஸ்விஸ் கனேடியர் புதிய ஏழு அதிசயங்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பை துவக்கி, மக்களால் பரிந்துரைக்கப்பட்டு, மக்களாலேயே தேர்வும் செய்யப்பட்ட 7 உலக அதிசயங்களின் பட்டியலை வெளியிட்டார். யுனெஸ்கோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இந்த தனியார் நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பு மற்றும் வெளியிட்ட இந்த பட்டியலுக்கு பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை என்றாலும், வெகு மக்களின் ஆதரவு மற்றும் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த தனியார் அமைப்பின் வாக்கெடுப்பு பரவலான வரவேற்பை பெறவே செய்தது. இப்போது இந்த தனியார் அமைப்பு மீண்டும் ஒரு புதிய அதிசயங்கள் பட்டியலை வெளியிட, மக்களை போட்டிக்கான இடங்களை பரிந்துரைக்குமாறு கோரியுள்ளது. முந்தய பட்டியல் மனிதர்களார் உருவாக்கப்பட்ட அதிசயங்கள், தற்போது தெரிவு செய்யப்ப்டவுள்ளவை இயற்கையாய் அமைந்த உலக அதிசயங்கள். அமேசான் மழைக்காடு, அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் எனும் பள்ளத்தாக்கு போன்ற இயற்கையான அதிச்யங்களை மக்கள் பரிந்துரை செய்து, அவற்றுக்கு இணையம், தொலைபேசி, செல்லிடபேசி குறுந்தகவல் ஆகியவை மூலம் வாக்களிக்கலாம். இதுவரை 6 கண்டங்களைச் சேர்ந்த 300 இடங்கள் இந்த இயற்கை ஏழு அதிசயங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அழிவின் விளிம்பிலுள்ள போனோபோக்கள்
மனித குலத்துக்கு மிகவும் நெருக்கமான குரங்கினமான போனோபோக்கள் அழிவின் விளிம்பில் உல்ள விலங்கினங்களில் ஒன்றாகும். போனோபோ குரங்குகள் அமைதியான குரங்கினமாக அறியப்படுகிறது. இக்குரங்கினத்தின் பாலியல் இன்பத்தை விரும்பும் வாழ்க்கை முறையும், பிரச்சனைகள் வராமல் தவிர்ப்பதில் ஈடுபடுகின்ற் பெண் குரங்குகளின் தலைமைத்துவமும் இவற்றின் சிறப்பு அம்சங்களாக கூறப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகாலத்தில் இந்த போனோபோ குரங்கினங்களின் எண்ணிக்கை மிக விரைவாகா குறைந்து வந்துள்ளது. உலக வன உயிரின நிதியத்தின் மதிப்பீட்டின் படி தற்போது 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இந்த எண்ணிக்கை இருக்கக்கூடும் எனப்படுகிறது. காங்கோ நாட்டில் மட்டுமே காணப்படும் இந்த போனோபோ இனத்தை பாதுகாக்க இப்போது காங்கோ நாட்டு அரசு வெப்பமண்டல மழைக்காட்டில் ஏறக்குறைய 17 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஒதுக்க தீர்மானித்துள்ளது. இந்த பரப்பளவு ஸ்லோவாக்கிய நாட்டின் பரப்பளவைவிட சிறிதளவே குறைவு. காங்கோ நாட்டின் பரப்பளவில் ஒரு விழுக்காட்டுக்கு கொஞ்சம் அதிகம். ஏற்கனவே இதுபோல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக நாட்டின் 8 விழுக்காட்டு வனப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. போனோபோ குரங்கினங்களுக்கான இந்த புதிய பாதுகாப்பிடத்தையும் சேர்த்தால் காங்கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் அளவு 10 விழுக்காட்டை எட்டியுள்ளது.
|