
30 ஹெக்டர் பரப்பளவிலான லு குவாங் என்னும் சுற்றுலாப் பண்ணை, சூ சோ நகரின் சி சான் தீவில் அமைந்துள்ளது. உற்பத்தி, உயிரின வாழ்வு, சுற்றுலா ஆகியவற்றைக் கொண்ட சுற்றுலாப் பண்ணை, சூ சோ நகரில் அமைவது, இதுவே, முதல் முறையாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள், விலங்குகள், வெப்ப அறைகள் ஆகிய மூன்று பகுதிகள், இப்பண்ணையில் இடம்பெறுகின்றன. சுமார் 300 மீட்டர் நீளமான பழத் தாழ்வாரத்தில், சீனாவின் தைவான் மாநிலத்திலிருந்து உட்புகுத்தப்பட்ட 40க்கு மேலான பழ வகைகள் வளர்க்கின்றன. விலங்கு வாழ்பகுதியில், முயல், கோழி, ஆடு உள்ளிட்ட வீட்டுப்பறவைகளையும், மான், எருமை முதலிய அரிய விலங்குகளையும் காணலாம். வெப்ப அறைகளில், வெள்ளரிக்காய், தக்காளி முதலிய வேதியியல் உரமற்றாத காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. நீர்பாசனத்துக்கான நீர், மழை நீராகும். தூய்மை செய்யப்பட்ட மழை நீரால் பாசன செய்யப்பட்டு வளர்த்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சுவையாக இருக்கின்றன என்று திரு Cai zhisheng பெருமையுடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

பொதுவாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய்கள், வேதியியல் உரங்களால் பயிர்செய்யப்பட்டு மாசுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பண்ணையில், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு, வேதியியல் உரத்தைப் பயன்படுத்துவதில்லை. இதனால், இதன் சுவை மிகவும் நல்லதாக உள்ளது என்றார் அவர்.
முந்தைய அனுபவங்களின் படி, பல காய்கறிகளும் பழங்களும் தைவானில் சீராக வளர்ந்து வருகின்றன. ஆனால், பெருநிலப்பகுதியில் பயிரிடும் போது, இயல்பு நிலைகள் மாறியிருப்பதால், அவற்றின் வளர்ப்பு நிலைமை, பிரச்சினையாகியுள்ளது. ஆனால், திரு Cai zhisheng பொருத்தவரை, இது கடினம் அல்ல. அவர் கூறியதாவது: தைவானின் வேளாண் உற்பத்திப் பொருட்களில் பெருமாபாலானவை, நீண்டகாலத்துக்கு முன்பே,

பெருநிலப்பகுதியிலிருந்து வந்தன. எமது அனுபவங்களையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, அவற்றை படிப்படியாக மேம்படுத்திய உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்று வளர செய்துள்ளோம். ஒரே காலநிலை, ஒரே வகை, ஒரே வழிமுறை ஆகியவற்றின் மூலம், அதன் சுவை இன்னும் உயரவில்லை. இப்பிரதேசத்தின் காலநிலை மற்றும் சூழ்நிலைக்குப் பொருந்தியதல்ல என்பது அதற்கு காரணமாகும் என்றார் அவர்.
தைவானிலிருந்து வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையில், பொது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்து, திரு Cai zhisheng பேசுகையில், இதற்கான செலவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்ததால், இப்பண்ணையிலான காய்கறிகளின் விலை, பொதுவான காய்கறிகளை விட 3 அல்லது 4 மடங்கு உயர்வாகும். இந்தக் காய்கறிகளும் பழங்களும் முக்கியமாக நட்சத்திர ஹோட்டல் மற்றும் பேரங்காடிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன என்று அறிமுகப்படுத்தினார்.

தைவான் மாநிலத்தில், சுற்றுலா வேளாண் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், பெருநிலப்பகுதியில் தொடர்புடைய சந்தையில் வாய்ப்பு மிகவும் அதிகம். யாங்சி ஆற்றின் முகத்துவாரத்தில் வலுவான நுகர்வு ஆற்றல் உள்ளது, சுற்றுலா வேளாண் துறையின் வளர்ச்சிக்குப் பொருத்தியது.
|