யாவ் இன மக்கள் முக்கியமாக, guangxi, hunan, yunnan, Guangdong முதலிய மாநிலங்களின் மலை பிரதேசங்களில் வசிக்கின்றனர். யாவ் இனம், சீனாவின் தென் பகுதியிலான மலை பிரதேச இனமாகும். இதன் மக்கள் தொகை, 12 இலட்சத்து 30 ஆயிரமாகும்.
யாவ் இனத்துக்கு சொந்த மொழி உண்டு. ஆனால் எழுத்துக்கள் இல்லை. பொதுவாக, அவர்கள் சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். வாய் மூல இலக்கியம் செழுமையானது.

யாவ் இன மக்கள் முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். துணையாக, வனத் தொழிலிலும் வேட்டையாடலிலும் ஈடுபடுகின்றனர். நெசவிலும் பூ வேலைப்பாட்டிலும் சிறந்தவர்கள்.
வசந்த விழா, டிராகன் விழா, நிலவுத் திருநாள் ஆகியவற்றை தவிர, panwang, வசந்த காலத்தை வழிபடும் விழா,danv விழா, பாட்டு விழா முதலியவை யாவ் இன மக்களின் பாரம்பரிய விழாக்களாகும். விழாவின் போது, கோழி, வாத்து, மீன், பன்றி, அவரையால் தயாரிக்கப்பட்ட தோஃபூ என்ற உணவு வகை, பல்வேறு காய்கறிகள் ஆகியவற்றை இம்மக்கள் சாப்பிடுகின்றனர்.

யாவ் இன மக்கள் மூதாதையாருக்கு அதிக மதிப்பு அளிக்கின்றனர். உணவு உண்பதற்கு முன், மூதாதையார்களின் பெயர்களை சில முறைகள் சொல்கின்றனர். இது, மூதாதையர்கள் சாப்பிட்டு முடித்த பின்பே, அடுத்த தலைமுறையினர்கள் சாப்பிட முடியும் என்று பொருள்படுகிறது. விழாவின் போது, வாத்து கோழி பன்றி இறைச்சி, மதுபானம் முதலியவற்றை படையல் செய்து முதாதையர்களை வழிபாடு செய்கின்றனர். நாய், பாம்பு, பூனை, தவளை முதலிய விலங்குகளைப் பயன்படு்த்தக் கூடாது..
நீண்ட மேளகஞவினய வாசித்து கொண்டே நடனமாடுவது, யாவ் இன மக்களின் பாரம்பரிய நடனங்களிலே ஒன்றாகும். இது, குய்சோ மாநிலத்தின் மொங்சியான் மாவட்டத்தின் மக்கள் குளிர்காலத்தில் ஆடுகின்ற பாரம்பரிய நடனமாகும். ஆசையை நனவாக்குவதற்காக நன்றி தெரிவிப்பது இதன் நோக்கமாகும்.

நீண்ட மேளத்தோடான நடனம், இந்நன்றி தெரிவித்தலுக்கு அடுத்த நாள் அதிகாலையில் நடத்தப்படுகிறது. நடனமாடுபவர்களின் எண்ணிக்கை ஒருகிராமத்தின் அனைத்து மக்களென்றாலும், பூர்வீக குடும்பத்தினர்கள் மட்டுமே என்றாலும் அனைவரும் கூட்டாக நடனமாட வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒன்றாக இந்நடனத்தில் கலந்து கொள்கின்றனர்.
|