2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, திபெத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை பாய்ந்து முன்னேற்றும் பொருட்டு, திபெத்தில் கட்டியமைக்கப்படும் 180 திட்டப்பணிகளுக்கென சீன அரசு சுமார் 7 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கும். நேற்று லாசாவில் நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் ஆணையத்தின் பணிக்கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இவ்வாறு கூறுகிறது. பல்வேறு துறைகளுடன் தொடர்பான இந்த 180 திட்டப்பணிகள், சமூகப் பொருளாதாரத்துக்கு பெரும் செல்வாக்கு ஏற்படுத்தும். ஆலி விமான நிலையம், சிங்காய்-திபெத் இருப்புப்பாதையின் நீட்டிப்பு நெறி உள்ளிட்ட திபெத்தின் அடிப்படை வசதிகளை பெரிதும் மேம்படுத்தும் முக்கிய போக்குவரத்து திட்டப்பணிகளும், விவசாயிகள் மற்றும் ஆயர்கள் வாழும் பிரதேசங்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் கிராமப்புற குடி நீர் பாதுகாப்பு திட்டப்பணி, குடியிருப்புப் பிரதேசங்களின் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டப்பணி உள்ளிட்ட திட்டப்பணிகளும் இவற்றில் அடங்கும். திபெத் கல்வி, சமூக உத்தரவாதம், உயிரின வாழ்க்கை சமனிலை உள்ளிட்ட திட்டப்பணிகளில் ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரை, 180 திட்டப்பணிகளில், சுமார் 80 விழுக்காடு மேற்கொள்ளப்பட துவங்கியுள்ளது.
|