• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-21 16:45:19    
உலகில் மிக சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனை

cri

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2007ம் ஆண்டுக்கான உலகில் மிக சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான திறனாய்வு முடிவுகள், 18ம் நாள் வெளியிடப்பட்டது. பிரபல பிரேசில் வீரர் காகாவும், பிரேசில் வீராங்கனை மார்தாவும், உலகில் மிக சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை பெற்றனர்.
அர்ஜென்டீன வீரர் மேசி, போர்த்துகீஸிய வீரர் Cristiano Ronaldo இருவரும், 2வது 3வது இடங்களை வகித்தனர்.
மகளிர் பிரிவில், ஜெர்மனி வீராங்கனை Prinzஸும் பிரேசில் வீராங்கனை Cristianeனும் மிக சிறந்த வீராங்கனையின் தரவரிசையில் 2வது 3வது இடங்களில் உள்ளனர்.

2007ம் ஆண்டுக்கான பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கால்பந்து அணிகளுக்கான தரவரிசையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் 17ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் சூய்ஷ் நகரில் வெளியிட்டது. இதில் சீன அணி, 81வது இடத்தில் உள்ளது

ஆசிய அணிகளில், சீன அணி8வது இடத்தில் இருக்கின்றது.
முதல் 3 அணிகளில், அர்ஜென்டீனா, பிரேசில், இத்தாலி ஆகிய 3 அணிகள் இருக்கின்றன.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்சிங்கின் போக்குவரத்து சேவை உத்தரவாதத்தைப் பெறும். பெய்சிங் ஒலிம்பிக் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பெய்சிங் மாநகராட்சி போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைவர் Liu Xiaoming இவ்வாறு கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தும் நேரத்துடன் இணைந்து, தற்போதைய பொதுப் போக்குவரத்து முறைமையின் செயல்பாட்டு நேரம் சரிப்படுத்தப்படும். சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் நகரவாசிகளுக்கும் சேவைபுரியும் வகையில், 24 மணி நேர பொதுப் போக்குவரத்து வலைப்பினலை பெய்சிங் மாநகராட்சி அமைக்கும் என்று Liu Xiaoming கூறினார். தவிர, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல சிறப்பு நெறிகளைப் பெய்சிங் உருவாக்கியுள்ளது. இந்தச் சிறப்பு நெறிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றியமையாத தேவைகளை மக்களுக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சுமார் 6 இலட்சம் வீரர்கள், ஆட்ட அதிகாரிகள், வெளிநாட்டு ரசிகர்கள் பார்வையாளர்கள் ஆகியோர்களை பெய்சிங் வரவேற்று உபசரிக்கும் என்று அறியப்படுகின்றது.