• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-24 16:26:42    
சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் சாம்பியன்

cri

2007ம் ஆணடுக்கான ஆடவர் மற்றும் மகளிர் உலக சாம்பியன் பட்டங்களை, பிரபல ஸ்விட்சர்லாந்து வீரர் Roger Federer, பெல்ஜிய வீராங்கனை Justine Henin இருவருக்கு வழங்குவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 17ம் நாள் இலண்டனில் அறிவித்தது.
2007ம் ஆண்டில், Roger Federer, ஆஸ்திரேலிய அமெரிக்க மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் உட்பட 8 போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை பெற்றார். உலக ஆடவர் சாம்பியன் பட்டத்தை அவர் பெறுவது, இது 4வது முறையாகும்.
மகளிர் பிரிவில், Justine Henin, பிரெஞ்சு, அமெரிக்க டென்னிஸ் போட்டிகள் உள்ளிட்ட 10 டென்னிஸ் போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை தட்டிச்சென்றார். அவர் உலக மகளிர் சாம்பியன் பட்டத்தை பெறுவது, இது 3வது முறையாகும்.

இத்தாலி கால்பந்து மன்றங்களுக்கிடை போட்டி
2007-2008 ஆண்டுக்கான இத்தாலி கால்பந்தாட்ட மன்றங்களுக்கிடை போட்டியின் 16வது சுற்று அனைத்து ஆட்டங்களும் 17ம் நாள் முடிவடைந்தன. லீக் போட்டியில் தரவரிசையில் முதலாவது இடம் வகித்த Inter Milan அணியின் வீரர்கள் Julio Cruz, David Suazo ஆகியோர் அடித்த 2 கோல்களுடன், Cagliari அணியை தோற்கடித்தது. 40 புள்ளிகளைப் பெற்ற நிலையில், லீக் அணி போட்டியின் தரவரிசையில் முதலிடம் விகித்துள்ளது.

ஸ்பெயின் கால்பந்து முதல் தர லீக் போட்டி
2007-2008 ஆண்டுக்கான ஸ்பெயின் கால்பந்து முதல் தர லீக் போட்டியின் 16வது சுற்று அனைத்து ஆட்டங்களும் 17ம் நாள் முடிவடைந்தன. போட்டியின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள Real Madrid அணியின் வீரர்கள் Ruud van Nistelrooy, Wesley Sneijder ஆகியோர் 2-0 என்ற கோல் கணக்கில் Osasuna அணியை வெல்ல வாய்ப்பானது. 38 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இது போட்டியின் தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது.