• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-25 17:35:15    
தலைவர் மா சே தூங் நினைவு மண்டபம்

cri

தலைவர் மா சே தூங் நினைவு மண்டபம், தியன் ஆன் மன் சதுக்கத்தின் தென் பகுதியில் அமைத்துள்ளது. இது 1977ம் ஆண்டு மே திங்கள், நிறுவப்பட்டது. இதன் பரப்பளவு, 57 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேலாகும்.

நினைவு மண்டபத்தின் வாயிலின் மேல், தலைவர் மா சே தூங் நினைவு மண்டபம் என்ற சீன எழுத்துக்கள் காணப்படுகின்றன. கீழேயுள்ள முதற் படியின் மேல், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட 44 தூண்கள், தங்க நிற உச்சியைத் தாங்கி நிற்கின்றன. இது, சீனத் தேசிய பாணியுடைய மண்டபமாகும்.

இங்குள்ள 10 மண்டபங்கள், வெளியே திறந்து வைக்கப்படுகின்றன. அவற்றில், 4 மண்டபங்கள் உங்களுக்காக முக்கியமாக அறிமுகப்படுத்தப்படும்.

வட மண்டபம். முக்கிய வாயிலில் நுழைந்தால், வட மண்டபம் இருக்கிறது. இது, அஞ்சல் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முக்கிய இடமாகும். இம்மண்டபத்தின் நடுவில், வெள்ளை பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்ட சிலை தலைவர் மா அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. சிலையின் உயரம் 3.45 மீட்டராகும்.

வணங்கும் மண்டபம். இது, இந்நினைவு மண்டபத்தின் மைய இடமாகும். இதன் நடுவில், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட படுக்கை ஒன்று இருக்கிறது. இப்படுக்கையைச் சுற்றி, அழகான மரங்கள் உள்ளன. இதன் மேல், மா சே தூங்கின் பூதவுடலைக் கொண்ட சவப்பெட்டி இருக்கிறது. பூதவுடலின் மேல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மூடப்பட்டுள்ளது. பார்க்க கம்பீரமாகவும் பக்திச் சூழலுடனும் காணப்படுகிறது.

அடுத்து, மா சே தூங், ச்சோ ஏன் லை, லியு ஷௌ ச்சீ, ச்சூ தே ஆகியோரின் சாதனைகளைக் காட்டும் மண்டபங்கள் இருக்கின்றன. மிக பல தொல்பொருட்கள், படங்கள், கடிதங்கள் ஆகியவற்றின் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் மக்கள் படைகளையும், சீன மக்கள் குடியரசையும் நிறுவுவது, ஷோசலிசக் கட்டுமானத்துக்குத் தலைமை தாங்குவது முதலியவற்றிலான இந்த நான்கு தலைவர்களின் சாதனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

திரைப்படம் காட்டும் மண்டபம். 2வது மாடியில் இருக்கிறது. மா சே தூங் உள்ளிட்ட சீனாவின் புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் செய்தி விளக்கப்படங்களை இங்கு பார்க்கலாம்.

இந்நினைவு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி, பசுமையான பிரதேசமாகும்.

அது, சமகாலத்தில் புகழ்பெற்ற சீன கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும் இடமாகும். அங்கே சேகரிக்கப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கை ஈராயிரத்துக்கு மேல்.