• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-25 21:11:42    
தேயிலை மற்றும் குதிரைப் பாதை

cri

Pu Er என்பது ஒரு நகரின் பெயர் மட்டுமல்ல, ஒரு வகை தேயிலையின் பெயரும் கூட. இது யுன்னான் மாநிலத்தின் சுமாவ் பகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

Pu Er நகரில் இத்தேயிலையின் வர்த்தக பரிமாற்றம் நிகழ்ந்த காரணம் தேயிலையின் பெயரும், Pu Er என்றானது. கி. பி. 25-220 ஆண்டு வரையிலான கிழக்கு ஹான் வம்சக்காலத்தில் தான் Pu Er தேயிலையின் உற்பத்தி தொடங்கியது. Pu Er தேயிலையின் விதைகளை மூன்று பேரரசுகளின் காலத்தில், Shu நாட்டு அமைச்சராக இருந்த Zhuge Liang என்பவர் விட்டுச் சென்றார் என்று கூறப்படுகிறது. 2000 ஆண்டுகால வரலாற்றில் Pu Er தேயிலை வெவ்வேறு பெயர்களால், வம்சங்கள் மாற மாற, தானும் பெயர் மாற்றம் பெற்று அழைக்கப்பட்டது.

உள்ளூர் தரவுகளின் படி, சிங் வம்சக்காலத்தில் (1644-1911) பரவலாக புகழ் பெற்று, வரவேற்கப்பட்ட காரணத்தால் சுமாவ் நகரை அண்டிய Pu Er தேயிலை மலைகளில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர் என்று அறியப்படுகிறது. தேயிலை மற்றும் குதிரைப் பாதையிலான வர்த்தக பரிமாற்றத்தில், Pu Er தேயிலை பெரும் பங்கு வகித்தது. ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் தேயிலை கொண்டு செல்லப்பட்டது. வியட்நாம், மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் Pu Er தேயிலை பெரிதும் வரவேற்கப்பட்டது.


யுன்னான் பெரிய இலை பசுந்தேயிலையை பதப்படுத்தி சிறப்பான ஒரு நொதித்தல் மூலம் பதனம் செய்யும் போது Pu Er தேயிலை கிடைக்கும். நீண்ட நெடுஞ்காலமான Pu Er தேயிலை பருகிய பின் இனிப்பான சுவையை தரும். சுவை தரும் பானமாக மட்டுமின்றி சத்தான மருந்தாகவும் Pu Er தேயிலை, இளையோருக்கும், முதியோருக்கும் நலன் தரும்.