• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-25 21:18:05    
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் மறு சுழற்சி

cri

திரும்பப் பெறும் பிரச்சினையை இத்திட்டம் அடிப்படையில் தீர்த்து, திரும்பப் பெறும் போக்கில் ஒவ்வொரு நடைமுறையும் அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறும் ஒவ்வொரு செல்லிடபேசியும் இதன் பாகங்களும் பதிவு செய்யப்பட்டு, மூடப்படுகின்றன. அனைத்து கழிவுச் செல்லிடபேசிகளும் சிறப்புத் தொழில் அமைப்புகளால் மாசுபடுத்தாமல் கையாளப்படுகின்றன.

 இவற்றின் சில பகுதிகள் மீண்டும் பயன்படுத்தத் தெரிவு செய்யபடுகின்றன. இந்த நடவடிக்கை பல்வேறு செல்லிடபேசி உற்பத்தி தொழிற்சாலைகளின் ஆர்வத்தைத் தூண்டிதுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கும் பொது மக்களின் புரிந்துணர்வைப் பயன் தரும் முறையில் உயர்த்தியுள்ளது. இயற்கை மற்றும் சமூக சூழலை மேம்படுத்துவதில் செயலாக்க உற்சாகத்துடன் ஈடுபட அவர்களை ஊக்குவித்துள்ளது. இது பற்றி திரு sha yue jia கூறியதாவது,
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன், ஒட்டுமொத்தமாக ஏற்பாடு செய்து, தொழிற்சங்கிலியில் இருக்கின்ற தொடர்புடைய தரப்புகளுடன் நன்றாகக் கலந்தாலோசிகின்றோம். கழிவுச் செல்லிடபேசிகளைக் கையாள்வதில் அதிகமாக செலவிடுகின்றோம் என்றார் அவர்.


கழிவுச் செல்லிடபேசிகளை திரும்பப் பெற்று மீண்டும் பயன்படுத்துவதில், உள்ளார்ந்த பொருளாதார மற்றும் சமூக பயன் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு செல்லிடபேசியின் ஒவ்வொரு மின்கலத்திலும், 6 கிராம் கோபால்ட் உள்ளது. தற்போது சீனாவில் ஆண்டுதோறும் மாற்றப்படும் செல்லிடபேசிகளின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றின் மின்கலங்களிலிருந்து 600 டன் கோபால்ட் மீட்கப்படலாம். ஆகவே கழிவுச் செல்லிடபேசிகளை திரும்பப் பெறுவது நகரத்தின் தங்க தாது வளமாக மாறிவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பசும் பெட்டி திட்டத்தின் செல்வாக்கை விரிவாக்கி, மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தி, மென்மேலும் அதிகமான மக்களை இத்திட்டத்தில் ஈர்க்கும் வகையில், சீனச் செல்லிடபேசி செய்தித் தொடர்பு குழுமம் புகழ்பெற்ற பல தொழில் முனைவோர்களையும், விளையாட்டு மற்றும் கலை துறைப் பிரமுகர்களையும் பிரச்சார நடவடிக்கையில் பங்கெடுக்க அழைத்துள்ளது. சீனாவின் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றவரான TENG HAI BING அவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது


பசுமையான ஒலிம்பிக் பற்றி இத்திட்டம் பிரச்சாரம் செய்கின்றது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடிய கழிவுச் செல்லிடபேசிகளையும் மின்கலங்களையும் பசும் பெட்டியில் வைக்க வேண்டும். மறுசுழற்சி ெசய்ய மக்களை ஊக்கப்படுத்துவதில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவரும் இம்முயற்சிக்காக ஆக்கப்பூர்வமாக பங்கு ஆற்றுங்கள் என்று அழைக்கின்றேன்.
தற்போது, இந்த திட்டம் மென்மேலும் அதிகமான பொது மக்களின் ஆதரவை பெற்றுள்ளது பெய்ஜிங் நகரவாசி yue wei கூறியதாவது,
இந்த நடவடிக்கை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மென்மேலும் அதிகமான மக்கள் ஆதரிக்க விரும்புகின்றேன். பெய்ஜிங்கின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இந்நகரத்துக்கு மேலும் அழகான எதிர்காலத்தைக் கொண்டு வர முயற்சி செய்வோம் என்றார் அவர்.


கழிவு மின்னணுப் பொருட்களைத் திரும்பப் பெறுவது பற்றிய சட்டத்தை வகுக்க சீனத் தேசிய சுற்றுச்சூழல் பாதுக்காப்பு பணியகமும் தகவல் தொழில் அமைச்சகமும் இணைந்து பாடுபட்டு வருகின்றன. கழிவு மின்னணுப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிரச்சினையை அடிப்படையில் தீர்க்கும் பொருட்டு, எதிர்காலத்தில் தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் படி கழிவு மின்னணுப் பொருட்களை திரும்பப் பெறும் கடப்பாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்று இத்துறைகள் உறுதிப்படுத்தியுள்ளன.