• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-26 16:50:25    
ஒலிம்பிக் இசை

cri

உள்ளூர் நேரப்படி 21ம் நாள் சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனம், ஸ்விட்சர்லாந்தின் சூய்ஷ் நகரில் உலக மகளிர் கால்பந்து தரவரிசையை வெளியிட்டது. சீன மகளிர் கால்பந்து அணி, 13வது இடம் வகித்தது. முதல் 10 இடங்களில் நுழையாமை, இது முதன் முறையாகும்.
ஜெர்மன், அமெரிக்கா, ஸ்விடன் அணிகள், முதல் 3 இடங்கள் வகித்தன.
23ம் நாள் NBA கூடைப்பந்து போட்டிகள், தொடர்ந்து நடைபெற்றன. Milwaukee Bucks அணிக்கும் Charlotte Bobcats அணிக்குமிடையிலான போட்டியில், சீன வீரர் yi jian lian தமது புள்ளி பெற்ற சாதனையை உருவாக்கினார்.
Milwaukee Bucks அணி 103-99 என்ற புள்ளி கணக்கில், Charlotte Bobcats அணியை தோற்கடித்தது. yi jian lian 29 புள்ளிகளையும் 10 reboundகளையும் பெற்றார்.

இதர சீன வீரர் yao ming விளையாடிய Houston Rockets அணி, 116-98 Chicago Bulls அணியை தோற்கடித்தது. Yao ming 18 புள்ளிகளையும் 8 reboundகளையும் பெற்றார்.
யுன்னான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது, திபெத் தன்னாட்சி பிரதேசத்தை ஒட்டியமைந்துள்ளது. Di Qing என்றால், திபெத் மொழியில் "மங்கா இன்பம்" என்று பொருள். திபெத், Li Su, Na Xi, ஹான், Bai உள்ளிட்ட 26 தேசிய இனங்கள் அங்கு வாழ்கின்றன. திபெத் இன மக்கள் தொகை, அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியாகும்.

ஒரு அருமையான புராணக்கதையின் காரணமாக, Di Qing, வெளியுலகத்தினரால் அறிந்து கொள்ளப்பட்டது. அமெரிக்க நூலாசிரியர் James Hilton 1933ஆம் ஆண்டு வெளியிட்ட "Lost Horizon" என்ற நாவலில் ஒரு கீழை நாட்டில் மலைகளிடையே அமைந்துள்ள முடிவில்லாத அமைதி மற்றும் சீர்மை கொண்ட இடமான "ஷாங்ரிலா" வர்ணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், Di Qing, இந்த நாவலில் வர்ணிக்கப்பட்ட அனைத்துக்கும் ஏற்றது என்று மக்கள் கண்டறிந்தனர். தவிர, Di Qing தன்னாட்சி சோவின் தலைநகர் Zhong Dian, திபெத் மொழியில் "ஷாங்ரிலா" எனப்படுகிறது. ஷாங்ரிலா என்றால், "சந்திரனும் சூரியனும் மக்களின் மனதில்" என்று பொருள். 2001ஆம் ஆண்டு, Zhong Dian என்ற பெயர், ஷாங்ரிலா ஆக மாற்றமடைந்தது.