ஒலிம்பிக் ஆதரவை வெளிப்படுத்த ஒரு வித்தியாசமான பயணம்
சாதாரணமாக ஓட்டினாலே சிலமுறை மண்ணை கவ்வுவதுதான் சிலரின் மிதிவண்டி ஓட்டும் திறன். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கான ஆதரவை வெளிக்காட்டுவதோடு அதற்கான பிரச்சார பயணமாக பின்புறமாக ஓட்டியபடி மிதிவண்டி பயணம் மேற்கொள்கிறார் லியுஜூன். கெனான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரான இவர் கிபெய் மாநிலத்திலுள்ள ஷிஜியாஸ_ஆங்கில்; அண்மையில் பின்புறமாக மிதிவண்டி பயணம் மேற்கொண்டார். உள்ளுர் மக்கள் இதை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். தனது சொந்த நகரான லுஷானிலிருந்து நவம்பர் 26 ஆம் நாள் புறப்பட்ட இவர் பெய்சிங் வரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகின்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு கவனத்தை ஈர்க்கும் விதமாக நாளுக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் அவர் பயணம் செய்கின்றார்.
சீன முதியோர் தங்களை பராமரிக்கும் முறைகளில் மாற்றம்
சீனாவில் முதியோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வதோடு, அவர்கள் தங்களை தாங்களே பராமரிக்க எடுக்கும் முயற்சிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீன நகர மற்றம் கிராம முதியோர் கணக்கெடுப்பு படி ஆண்டுக்கு 3.2 விழுக்காட்டிற்கு மேலானோர் ஓய்வுபெறுகின்றனர். இது நாட்டின் ஓரண்டுக்கான மக்கள்தொகை பெருக்கத்தைவிட 5 மடங்கு பெரியது. 2006 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் 60 வயதுக்கு மேலானவர்கள் 146.57 மில்லியன். இது உலக முதியோர்களில் 21.4 விழுக்காடாகும். 2006 ஆம் ஆண்டு 49.7 விழுக்காட்டு நகர்புற முதியோர்கள் தனியாகவும் 50.3 விழுக்காட்டினர் குடும்பத்துடனும் வாழ்கின்றனர். கிராமபுறங்களில் 38.3 விழுக்காட்டினர் தனியாகவும் 61.7 விழுக்காட்டினர் குடும்பத்தினரோடும் வசிக்கின்றனர். 2000 ஆண்டில் 41 விழுக்காட்டினர் மட்டுமே தனியாக வாழ்ந்தனர். இது தற்போது நகர மற்றும் கிராமபுறங்களில் முதியோர் தனியாக வாழ்வது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியள்ளது. அதே போல நகரபுற முதியோர்களில் 50.3 விழுக்காட்டினரும், கிராமபுறங்களில் 11.8 விழுக்காட்டினரும் தங்களை பராமரிக்க சமூக காப்பீட்டை முதல் தெரிவாக கொள்கின்றனர். 2000 ஆம் ஆண்டில் இருந்ததை விட தங்களை பராமரித்துக் கொள்ள சமூக காப்பீட்டை தெரிவு செய்யும் விழுக்காடு உயர்ந்துள்ளது என இக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நெகிழ வைத்த விலங்குகளில் பன்றி முதலிடம்
சீனாவில் 2007 ஆம் ஆண்டு மிகவும் நெகிழ வைத்த விலங்குகளின் தெரிவில் முதலிடத்தை வலிமையான பன்றி பெற்றுள்ளது. அப்பன்றி என்ன செய்தது தெரியுமா? கசாப்புகடைகாரர் ஒருவர் இன்னொரு பன்றி ஒன்றை வெட்ட தயாரானபோது அவரை தாக்கி வெட்டயிருந்த பன்றியை காப்பாற்றியுள்ளது. இச்செயல் இவ்வாண்டின் காதலர் தினத்தன்று நடந்துள்ளது. ஹ_னானை மையமாக கொண்ட rednet இணையதளத்தின் செய்திபடி பன்றிளை வெட்ட தயாரான மனிதனை நோக்கி விரைந்த அந்த வலிமையான பன்றி அவரை தாக்கி தரையில் விழச் செய்துள்ளது. இதனால் அப்பன்றியின் உரிமையாளர் கசாப்புகாரின் மருத்துவ சிகிச்சைகாக 800 யுவான் கொடுக்க வேண்டியதாயிற்று. பொதிந்த இறச்சியை விற்க தனது தலைவருக்கு உதவிய நாயும் எலிக்குட்டிக்கு தனது பாலை அளித்த தாய் பூனையும் நெகிழ வைத்த விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. உள்நாட்டில் பிரபலமான இணையதள சமூகத்திடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கணக்கில் மனிதருக்கு நிகரான குரங்குகள்
சிம்பன்சி குரங்குகள் கல்லூரி மாணவர்களுக்கு நிகரான செயல்பாட்டை மனக்கணக்கில் காட்டியுள்ளது. எனவே வாய் மொழியல்லாத கணித திறன்கள் மனிதருக்கே உரியதல்ல என்று டியூக் பல்கவைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2 குரங்குகள் மற்றும் 14 கல்லூரி மாணவர்களை வைத்து இந்த ஆய்வு முறை நடத்தப்பட்டது. 40 விதமான வித்தியாசமான கணக்குகளை நூற்றுக்கு மேலான முறை நடத்தப்பட்டு சோதனை செய்ப்பட்டது. இதில் குரங்குகள் 76 விழுக்காடு சரியாக செய்துள்ளன. மாணவர்கள் 94 விழுக்காடு சரியாக செய்துள்ளனர்.
இக்கணித அடிப்படை நமது முற்கால பரிணாம வளர்ச்சியின்போது பகிர்ந்து கொள்ளப்பட்ட திறனாக இருக்கலாம் என்றும், மனிதரிலான கணித அறிவு வளர்ச்சி, அதாவது மிக சிக்கலான கணக்குகளை கையாள அனுமதிக்கும் மொழியின் முக்கியத்துவத்தை வெளிபடுத்தியுள்ளது என்றும் இவ்வாய்வை பற்றி அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
93 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த கிறிஸ்மஸ் வாழ்த்து
1914 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை 93 ஆண்டுகளுக்கு வடமேற்கு கான்னஸை வந்தடைந்துள்ளது. இந்த அட்டை 1914 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 ஆம் நாள் நிபிராஸ்காவிலுள்ள அல்மாவிலிருந்து ஓபர்லினில் உள்ள இதெல் மார்ட்டீன் அம்மையாருக்கு உறவினர்கள் அனுப்பியுள்ளனர். இதெல் இறந்து விட்டதால் 93 ஆண்டுகள் பழையதான வாழ்த்து அட்டை அவருடைய மைத்துனி பெர்னிஸ் மார்டீனிடம் வழங்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலான ஒரு சென்ட் அஞ்சல் கட்டணம் போதாது என்பதால் வேறோரு அஞ்சலட்டையில் தற்போதைய அஞ்சல் கட்டணத்தோடு அனுப்பப்பட்டு பெர்னிஸ் மார்டீனிடம் வழங்கப்பட்டுள்ளது. 93 ஆண்டுகளாக சிதையாமல், வெளியே போடப்படாமல், நல்ல முறையில் வாழ்த்து அட்டை சென்றடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
|