• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-27 20:20:02    
தைவான் வணிகர் திறந்து வைத்த சுற்றுலாப் பண்ணை

cri
சூ சோ நகரில், தைவான் வணிகர் திறந்து வைத்த லு குவாங் என்னும் சுற்றுலாப் பண்ணை பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் கலைமகள்.
30 ஹெக்டர் பரப்பளவிலான லு குவாங் என்னும் சுற்றுலாப் பண்ணை, சூ சோ நகரின் சி சான் தீவில் அமைந்துள்ளது. உற்பத்தி, உயிரின வாழ்வு, சுற்றுலா ஆகியவற்றைக் கொண்ட சுற்றுலாப் பண்ணை, சூ சோ நகரில் அமைவது, இதுவே, முதல் முறையாகும்.


பெருநிலப்பகுதியை விட, தைவான் மாநிலத்தின் வேளாண் தொழில் நுட்பம், முன்னேறியது. தைவான் வணிகர்கள் பெருநிலப்பகுதியில் சுற்றுலா வேளாண் துறையில் முதலீடு செய்வது வரவேற்கப்படுவதற்கான காரணங்களில், இது ஒன்றாகும். தைவான் வணிகர்கள், சுற்றுலாப் பண்ணை என்ற முன்னேறிய கருத்தையும், வேளாண் துறையின் முன்னேறிய நிர்வாக அனுபவத்தையும் கொண்டுவருகின்றனர் என்று சூ சோ மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவர் வூ வென் யுவான் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

 
இப்பண்ணையின் திறப்பினால், சி சான் என்ற தீவு மற்றும் சூ சோவின் தேய் ஹு பிரதேசத்தில் வேளாண் துறை வெற்றிகரமாக மாற்றமடைந்து, வேகமாக வளர்ந்து, நவீன வேளாண் துறையையும் சுற்றுலா சேவை துறையையும் இணைக்கும் முக்கிய முன்மாதிரியாக மாறிவிடும். அதே வேளை, இப்பண்ணை, தைவான் நீரிணையின் இருகரைகளின் வேளாண் துறை, சுற்றுலா துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்கும் நல்ல மேடையையும் மாதிரியையும் வழங்கியுள்ளது என்றார் அவர்.
சீன கோமின்தாங் கட்சியின் துணைத் தலைவர் சியாங் பிங் குவென், சூ சோவில் மின்னணு தகவல் பொருட்காட்சியில் கலந்துகொண்ட போது, இப்பண்ணையின் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:


சூ சோ, உயர் அறிவியல் தொழில் நுட்ப துறையில், முதலீடு செய்யும் நல்ல இடமாக மட்டுமல்ல, மூன்றாவது தொழில் துறையான சுற்றுலா முதலீட்டுக்கு, நல்ல இடமாகவும் இருக்கிறது. சூ சோ, அதிகமான தைவான் வணிகர்கள் குழுமி வாழும் நகரமாகும். தரமிக்க மின்னணு உற்பத்திப் பொருட்கள், அழகான இயற்கைக் காட்சிகள் ஆகியவை, அதன் தனிச்சிறப்பியல்பாகும். இக்குழு, தைவானின் அனுபவத்தைப் பயன்படுத்தி, சூ சோவில், நிலத்தை சரியாக பயன்படுத்தி, உயிரின சுற்று சூழலைப் பேணிகாத்து, வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று நம்புகின்றேன். இம்முதலீடு மூலம், இந்த பிரதேசத்தின் செழுமையை விரைவுபடுத்துவதோடு, இருகரைகளின் அமைதியை மேலும் முன்னேற்றுவிக்கும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
நேயர்களே, மாசுப்படாத தைவான் காய்கறிகளையும் பழங்களையும் உண்டு, இயற்கையான வேளாண் துறை உற்பத்தியை நீங்களே உணர்ந்துக்கொள்ள வேண்டுமானால், லு குவாங் சுற்றுலா பண்ணைக்கு வாருங்கள்.


இனி, சுற்றுலா தகவல்கள்
தொடர்வண்டி மூலம், சூ சோ செல்வது மிகவும் வசதியாக இருக்கிறது. விமானம் மூலமாக இருந்தால், ஷாங்காயில் இறங்க வேண்டும். ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து, சூ சோவுக்கு செல்லும் பேருந்து இருக்கிறது. சூ சோவின் சிற்றூண்டி மிகவும் புகழ்பெற்றது. வாய்ப்பு இருந்தால், நீங்கள் சாப்பிட்டு மகிழுங்கள்.