சீனாவின் 11வது புத்த மத பெரியார் பென்சான் ஏல்தேனி ச்செச்சிஜாம்பு டிசம்பர் 19ம் முதல் 26ம் நாள் வரை தென் சீனாவிலுள்ள பூச்சியன் மாநிலத்தில் பணி பயணம் மேற்கொண்டார். திபெதின் லின்சு பிரதேசத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பூச்சியன் மக்கள் தன்னலமற்ற உதவி வழங்கியதற்கு அவர் உளமார்ந்த நன்றி தெரிவித்தார். பூசியன் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து பொருளாதாரம் மேலும் செழுமையாக வளர வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். இதற்கிடையில் அவர் கோயில்களுக்குச் சென்று அங்கு வாழ்கின்ற மத குருமார்களை சந்தித்துரையாடினார். கோயில்களுக்கு வழிபாடு செய்த மக்களை கண்டு சிறுபான்மை தேசிய இன கொள்கை உண்மையாக நடைமுறைபடுத்தப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
|