• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-28 17:16:58    
NBA கூடைப்பந்து போட்டி

cri

23ம் நாள் NBA கூடைப்பந்து போட்டிகள், தொடர்ந்து நடைபெற்றன. Milwaukee Bucks அணிக்கும் Charlotte Bobcats அணிக்குமிடையிலான போட்டியில், சீன வீரர் yi jian lian தமது புள்ளி பெற்ற சாதனையை உருவாக்கினார்.
Milwaukee Bucks அணி 103-99 என்ற புள்ளி கணக்கில், Charlotte Bobcats அணியை தோற்கடித்தது. yi jian lian 29 புள்ளிகளையும் 10 reboundகளையும் பெற்றார்.
இதர சீன வீரர் yao ming விளையாடிய Houston Rockets அணி, 116-98 Chicago Bulls அணியை தோற்கடித்தது. Yao ming 18 புள்ளிகளையும் 8 reboundகளையும் பெற்றார்.

உள்ளூர் நேரப்படி 21ம் நாள் சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனம், ஸ்விட்சர்லாந்தின் சூய்ஷ் நகரில் உலக மகளிர் கால்பந்து தரவரிசையை வெளியிட்டது. சீன மகளிர் கால்பந்து அணி, 13வது இடம் வகித்தது. முதல் 10 இடங்களில் நுழையாமை, இது முதன் முறையாகும்.
ஜெர்மன், அமெரிக்கா, ஸ்விடன் அணிகள், முதல் 3 இடங்கள் வகித்தன.
ஊக்கமருந்து சோதனையில் தேறாத பிரேசில் கால்பந்து வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான Romario, உள்ளூர் நேரப்படி 18ம் நாள், பிரேசில் விளையாட்டு நடுவர் மன்றத்தால் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதி நீக்கப்பட்டார். 120 நாட்களுக்கு இத்தண்டனை நீடிக்கும்.
2 திங்களுக்கும் முன் நடைபெற்ற பிரேசில் கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட போது, அவர் ஊக்கமருந்தை பயன்படுத்தினார். பிரேசில் விளையாட்டு நடுவர் மன்றம் ஆதரவாக 3 வாக்குகள் மற்றும் எதிர்ப்பாக 2 வாக்குகள் என்ற நிலையில், Romarioவுக்கான தண்டனையை உறுதிப்படுத்தியது.
ஆடவர் மற்றும் மகளிர் உலக சாம்பியன் பட்டங்களை, பிரபல ஸ்விட்சர்லாந்து வீரர் Roger Federer, பெல்ஜிய வீராங்கனை Justine Henin இருவருக்கு வழங்குவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் 17ம் நாள் இலண்டனில் அறிவித்தது.

2007ம் ஆண்டில், Roger Federer, ஆஸ்திரேலிய அமெரிக்க மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் உட்பட 8 போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை பெற்றார். உலக ஆடவர் சாம்பியன் பட்டத்தை அவர் பெறுவது, இது 4வது முறையாகும்.
மகளிர் பிரிவில், Justine Henin, பிரெஞ்சு, அமெரிக்க டென்னிஸ் போட்டிகள் உள்ளிட்ட 10 டென்னிஸ் போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை தட்டிச்சென்றார். அவர் உலக மகளிர் சாம்பியன் பட்டத்தை பெறுவது, இது 3வது முறையாகும்.