துச்சயா இன மக்கள், பெரும்பாலும் ஹூநான் மாநிலத்தின் yongshun, longshan, baojing, guzhang, ஹூபெய் மாநிலத்தின் laifeng, lichuan, hefeng,xianfeng, yien ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 57 இலட்சத்து 4 ஆயிரத்து 2 நூறாகும்.
து ச்சியா இன மக்கள், தங்களை பி ச் கா என அழைக்கின்றனர். அவர்களுக்கு சொந்த மொழி உண்டு. இது, சீன-திபெத் மொழிக் குடும்பத்தின் திபெத்-மியம்மா கிளையைச் சேர்கிறது. பெரும்பாலானோர் சீன மொழி பேசுகின்றனர். தறபோது மிக குறைவான பிரதேசங்களில் சிலர் இன்னும் து ச்சியா மொழி பேசுகின்றனர்.

இவ்வினத்தோர் தங்களது மூதாதையார்களையும், பல கடவுள்களையும் வழிபாடு செய்கின்றனர்.
து ச்சியா இன மக்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். பூ வேலைப்பாட்டிலும் இவர்கள் சிறந்தவர்களாவர். சிற்பங்கள், சி்த்திரம், நெசவு முதலியவை, து ச்சியா இனத்தின் பாரம்பரிய வேலைப்பாடுகளாகும். து ச்சியா பூ வேலைப்பாடு, சீனாவின் மிகப் புகழ் பெற்ற 3 பூ வேலைப்பாடுகளில் ஒன்றாகும்.

து ச்சியா இன மக்கள், மலைப் பிரதேசப் பாடல்களைப் பாட விரும்புகின்றனர். காதல் பாட்டு, திருமணப் பாட்டு, கை அசையும் பாட்டு, உழைப்புப் பாட்டு முதலியவை, அவர்கள் விரும்புகின்ற பாடல்களாகும். கை அசைந்து ஆடும் நடனம், வெண்கல மணி நடனம் முதலியவை து ச்சியா மக்களின் பாரம்பரிய நடனங்களாகும்.
து ச்சியா மக்களின் உணவுகள், புளிப்பானதாகவும் நறுமணம் கொண்டதாகவும் உள்ளன. அவர்களின் வாழ்க்கையில், மிளகாய், ஒரு காய்கறி மட்டுமல்ல, உணவைச் சுவைப்படுத்தும் இன்றியாமையாத பொருளுமாகும். சோயாஅவரையால் தயாரிக்கப்பட்ட தோஃபூ என்ற உணவு வகையும், மிக அதிகமாக சாப்பிடுகின்றனர்.
விருந்தின் போது, விருந்தினர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், இறைச்சி பெரிய துண்டு துண்டாக வெட்டி வைக்கப்படுகிறது. மதுபானமும், பெரிய பாத்திரங்களில் வைக்கப்படுகிறது.

திருமணம், ஈமச் சடங்கு, வீடுகளின் கட்டுமானம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, இவர்கள் விருந்துகளை நடத்துகின்றனர். ஒவ்வொரு மேசையில், 9, 7 அல்லது 11 உணவு வகைகளை வைப்பது வழக்கம். 8 அல்லது 10 இரட்டைப்படை எண்ணிக்கையில் உணவு வகைகள் வைக்கப்படுவதில்லை.
|