"தனிநபரின் வருமான வரி சட்டத்தின்" திருத்தப் பணி
cri
"தனிநபரின் வருமான வரி சட்டத்தின்" திருத்தம் தொடர்பான பணியை சீனாவின் சட்டமியற்றல் அமைப்பு இன்று நிறைவேற்றியது. தனிநபரின் வருமான வரி வசூலிப்பு வரையறை, தற்போதைய திங்களுக்கு 1600 யுவானிலிருந்து 2 ஆயிரம் யுவான் வரை உயர்த்தப்படும். அடுத்த ஆண்டின் மார்ச் திங்கள் முதல் நாள் முதல், சீனாவில் இப்புதிய வரையறை நடைமுறைக்கு வரும். இடைநிலை மற்று்ம் குறைந்த வருமானம் பெறுவோரின் சுமையை மேலும் குறைக்கும் பொருட்டு, இவ்வருமான வரி வசூலிப்பு வரையறையை சீனா மீண்டும் உயர்த்தியுள்ளது. இதற்குப் பின், வருமான வரியை வசூலிக்க வேண்டியவரின் எண்ணிக்கை, நாட்டின் முழுவதிலும் உள்ள பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் வகிக்கும் விகிதாசாரம் முந்தைய 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரை குறைக்கப்படும்.
|
|