உற்பத்தி பொருட்களின் தரம் மீதான நீண்டகால கண்காணிப்பு அமைப்பு முறை
cri
சீனாவின் பல்வேறு இடங்களில், உற்பத்தி பொருட்களின் தரம் மீதான நீண்டகால கண்காணிப்பு அமைப்பு முறையை நிறுவி, மேம்படுத்த வேண்டும் என்று சீன அரசவை செய்தி துறை அலுவலகத்தின் துணை தலைவர் Wang Guo Qing கூறியுள்ளார். நேற்று Hai Nan மாநிலத்தின் Bo Ao நகரில், இம்மாநிலத்தின் உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு நிலைமையை கண்காணித்த போது, செய்தியாளரிடம் அவர் இவ்வாறு கூறினார். உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்தி, உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கு, குறுகிய காலத்தில் திடீர் சோதனை மற்றும் சந்தை கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்வது மட்டும் போதாது. சட்டம், அமைப்பு முறை, வரையறை உள்ளி்ட்ட துறைகளில், உற்பத்திப் பொருட்களின் தரம் மீதான நீண்டகால கண்காணிப்பு அமைப்பு முறையை நிறுவி, மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
|
|