• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-31 11:15:24    
இரண்டாவது பூமி

cri

இதுவரை, கிரக ஆராய்ச்சியாளர்கள் 250 க்கு மேலான இதர சூரிய கோள்களை கண்டுபிடித்துள்ளனர். தொலைதூர உலகங்கள் வியாழன் கோளை விட பெரிய வாயுக் கோள்களாகும். தூசியால் கோள்கள் உருவாவதை போன்றே மனிதர்களும் மடிந்த விண்மீன்களிருந்து வெளியான துசியால் உருவாயினர் என்று கூறி உலக மற்றும் உயிரின உருவாக்கத்திற்கான விடை காண வானவியல் வல்லுனர்கள் முயற்சித்துள்ளனர்.

அது சரி, கோள்களும், மனிதர்களும் மடிந்த விண்மீன்களிருந்து வெளியான தூசியிலருந்து வந்ததாகக் கொண்டால் அந்த விண்மீன்களை உருவாக்கிய தூசி எங்கிருந்து வந்தது?

கருங்குழி எனப்படும் மடிந்துபோன விண்மீன்களால் ஏற்படும் ஈர்ப்புவிசை அதிகம் கொண்ட பெரும்பள்ளம் வாயுவை உள்ளிழுப்பதால் ஏற்படும் வெப்பமான கதிரியக்க ஆற்றலால் தூசி வந்தது என நாசாவின் தொலைநோக்கு கருவி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்பிட்ஸர் விண் தொலைநோக்கி அண்மையில், 8 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஒளிநிறைந்த, விண்மீன் போன்ற கட்டுகோப்பான, சூரிய குடும்பம் உள்ளிட்ட பல்வேறு கோள்களும், விண்கற்களும், நட்சத்திரங்களும் அடங்கிய பால்வீதியின் மொத்த ஆற்றல் வெளிப்பாட்டை கொண்ட குவாசர்களின் கருவில் அதிக அளவிலான தூசியை இனம் கண்டுள்ளது.

இந்த தூசியில் இருப்பதை கண்டறிய தொலைநோக்கு கருவி மூலம் பார்த்தபோது கண்ணாடி, மணல், படிகம், பளிங்குக்கல், மாணிக்கம் மற்றும் நீலக்கல் போன்றவற்றின் அடையாளங்களை கண்டுபிடித்தனர் என்று இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழக சிஸ்கா மார்க்விக் கெம்பர் அம்மையார் கூறினார். வானியற்பியல் இதழில் வெளியிடப்படும் இவ்வாய்வின் முன்னணி ஆசிரியர் இவராவார்.

விண்மீன்கள் அதிகமான அளவு வாயுவால் ஆனது. தூசி, விண்மீன் உருவாக குளிராக்குகிற முறைவழியாக்கத்திற்கு மிக முக்கியமானது. எஞ்சிய தூசிகள் ஒன்றாகி கோள்களாகவும், வால்நட்சத்திரங்களாகவும்;, விண்கற்களாகவும் உருவாகின்றன என்று லாஸ் ஏஞ்சல், கலிபோர்னியா பல்கலைக்கழக வானவியல் வல்லுனரும், இவ்வாய்வு இணை ஆசிரியருமான சாரா ஹலாக்கர் தெரிவித்தார். "முடிவாக எல்லாம் விண்வெளி தூசியிலிருந்து உருவாகின்றன" என்ற மார்க்விக் கெம்பர் "இது புதிரின் எல்லா பகுதிகளை இணைத்து விடைக்காண்பது போல் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை அறிதாலாகும்" என்றார். இளைய விண்வெளி கோளின் கருவுக்கு அப்பாலுள்ள, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவான கோள்கள், மடிந்த விண்மீன்களின் உடைவால் உருவானதாகும். பூமியும் அவ்வாறு உருவானதே.

அதுசரி, முதல் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான அகிலம் மற்றும் ஆதிகால தலைமுறை விண்மீன் அமைப்புகள் உருவாக்கம் ஆகியவற்றிற்கான தூசி எங்கிருந்து வந்தது என்ற கேள்வி மீண்டும் எழுவது சாத்தியமே.

"அது கருங்குழிகளிலிருந்து வெளியாகும் காற்றில் உள்ளது" என்ற மார்க்விக் கெம்பர் அம்மையார் "வாயு மூலக்கூறுகள் ஆயிரக்கணக்கான டிகிரி பாரன்கீட் வெப்பமுடைய இளைய விண்வெளிக்கோளின் கருவிலான வெப்பத்தில் இணைந்து தூசுக் கூட்டங்கள் உருவாகின்றன. இந்த கூட்டங்கள் சேர்ந்து, பெரிதாகி தூசி கட்டிகளாகி கற்களாக மாறுகின்றன" என்றார். "அகிலத்தின் ஆதிகால அடிப்படை புதிருக்கு விடையளிப்பதற்கான மிக முக்கிய ஆய்வு இது" என்று நாசா வானியற்பியல் பிரிவு முன்னாள் இயக்குனரும் கார்நெல் பல்கலைக்கழக வானவியலாளருமான டான் வீட்மேன் கூறினார்.

பூமியும், உயிர்களும் எப்படி வந்தன?

தூசியிலிருந்து வந்தன.

தூசி எங்கிருந்து வந்தது?

கருங்குழிகளிலிருந்தான காற்றிலிருந்து வந்தது.

காற்று எங்கிருந்து வந்தது?

இப்படியே தொடர்ந்தால் இத்தேடல் தொடர் தேடல் எனப்புரியும். "உண்மை தொடர் தேடல்" என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். வாழ்வும் தொடர் தேடலே...