• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-08 16:14:12    
ஆட்டிறைச்சி இடம்பெறும் ஒரு உணவு வகை பற்றி

cri

வாணி -- வணக்கம், நேயர்களே. மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் -- இன்று ஆட்டிறைச்சி இடம்பெறும் ஒரு உணவு வகை பற்றி எடுத்து கூறுகின்றோம்.

வாணி -- ஆமாம். இந்த உணவு வகை சீன சான் சி மாநிலத்தின் சி ஆன் நகரில் மக்கள் மிகவும் விரும்பு உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த நகரில் மக்கள் ஆட்டிறைச்சி வறுவல்களை அடிக்கடி சமைக்கின்றனர். ஆகையால், இந்த வறுவல் மிகவும் சுவையானது. ஆட்டிறைச்சி விரும்பும் நேயர்கள் நாங்கள் அறிமுகப்படுத்தும் வழிமுறை பின்பற்றி வீட்டில் தயாரித்து ருசிப் பார்க்கலாம்.

க்ளீட்டஸ் -- இதற்கு என்ன என்ன பொருட்கள் தேவை?

வாணி -- சரி, நான் எடுத்து கூறுகின்றேன்.
ஆட்டிறைச்சி 500 கிராம்
ஆட்டின் பின் கால் எலும்பு 1
காளாண் 3
சோயா பீன்னால் தயாரிக்கப்பட்ட தொ புஃ 50 கிராம்
cumin 5 கிராம்
Chinese cinnamon 3 கிராம்
வெங்காயம் போதிய அளவு
கொத்த மல்லி சிறிதளவு
உப்பு 10 கிராம்

வாணி -- இந்த உணவு வகையின் தயாரிப்புக்கு அதிக நேரம் தேவை. முதலில், ஆட்டிறைச்சியிலுள்ள ரத்தத்தை நீக்கும் வகையில், இதனை தன்னீரில் சுமார் ஒரு மணி நேரமாக வைக்கவும். பிறகு, ஓடும் நீரில் இதனை நன்றாக சுத்தம் செய்து, பெரிய பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். ஆட்டு கால் எலும்பையும் பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.

க்ளீட்டஸ் -- காய்ந்த காளாண் நீரில் வைத்து, சுத்தம் செய்யவும். soft ஆக மாறும் வரை வெளியே எடுக்கலாம். தொ பூஃவை பொடிபொடியாக நறுக்கவும். cumin, Chinese cinnamon முதலியவற்றை ஒரு சிறிய துணிப் பையில் வைக்கவும். வெங்காயத்தை சிறிதளவாக நறுக்கவும்.

வாணி -- வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் சுமார் ஒன்றரை லிட்டர் தன்னீரை ஊற்றவும். வைகவிடுக்கப்பட்டப் பின், நறுக்கப்பட்ட எலும்புகளை இதில் போடவும். சுமார் 30 நிமிடமாக வேகவிடுங்கள். பின்னர், மசாலா துணிப் பையையும் ஆட்டிறைச்சி பொடிகளையும் இதில் வைத்து, மிதமான சூட்டில் தொடர்ந்து 2 மணி வேகவிடுங்கள்.

க்ளீட்டஸ் -- இந்தப் போக்கில், ஆட்டிறைச்சி சூப்பில் அதிக froth தோன்றக் கூடும். இதை நீக்க வேண்டும்.

வாணி -- இன்னொரு மணிக்குப் பின், ஆட்டிறைச்சி சூப்பில் தொ பூ, காளாண், ஆகியவற்றை போடலாம். 5 நிமிடங்களாக வேகவிடுங்கள்.

க்ளீட்டஸ் -- பெரிய அளவுடைய இறைச்சி பொடிகளை வெளியே எடுத்து, இவற்றை சிறிதளவுக நறுக்கவும். bowlஇல், ஆட்டிறைச்சி பொடி, சூப், தொ பூஃ, காளாண் ஆகியவற்றை வைத்து, கடைசியில், நறுக்கப்பட்ட மல்லி, வெங்காயம் ஆகியவற்றை வைக்கலாம்.

வாணி -- கேட்பதற்கு ருசியானது. அல்லவா? இத்துடன் இன்றைய ஆட்டிறைச்சி வறுவல் தயார்.

வாணி -- சீனாவில் நடுப் பகுதியில் மக்கள் ஆட்டிறைச்சி சமைக்க விரும்புகின்றனர். சி ஆன் நகரில் இந்த உணவு வகையை தயாரிப்பதற்கு ஒரு சிறப்பு வாணலி உண்டு. இதன் மேலை பகுதி பெரியது, கீழ் பகுதி சிறியது. பல உணவு விடுதிகள், வாசலில் இந்த வாணலி வைத்து, ஆட்டிறைச்சி வறுவலை சமைக்கின்றன. வெளியேற்ற மணம் பல மக்களை உணவு விடுதிக்குள் ஈர்க்கலாம்.

க்ளீ்ட்டஸ் -- வாய்ப்பு இருந்தால், சி ஆன் நகருக்குச் சென்று, இந்த உணவு வகையை ருசிப் பார்க்க வேண்டும்.

வாணி -- கண்டிப்பாக, உண்மையில், சீனாவில் பல்வேறு இடங்களில் தனிப்பட்ட சிறப்புடைய உணவு வகைகள் உள்ளன. சுவையான உணவு பயணம் மேற்கொள்வது ஒரு நல்ல தேர்வாகும்.