• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-02 16:41:22    
தமிழ் மூலம் சீனம் பாடம் 112

cri

வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் முதலில்最 zui என்பதை கற்றுக்கொண்டுள்ளோம். 最 zui, என்றால் உச்ச நிலையில் இருப்பது என்று பொருள். மற்றவற்றுடன் ஒப்பிடும் போது, இது தான் நல்லது என்ற பொருளை வெளிப்படுத்த இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இது மிகையானதைக் குறிக்கிறது.

வாணி – என்னைப் பின்பற்றி, வாசியுங்கள்.
最 zui,

க்ளீட்டஸ் --最 zui,

வாணி --最 zui, 4வது தொனி, 好 hao, 3வது தொனி. 最好 zui hao, என்பது மிகவும் நல்லது.

க்ளீட்டஸ் --最 zui, 4வது தொனி, 好 hao, 3வது தொனி. 最好 zui hao, என்பது மிகவும் நல்லது.

வாணி --最 zui, 4வது தொனி, 热re, 4வது தொனி. 最热 zui re, என்பது மிகவும் வெப்பம்

க்ளீட்டஸ் --最 zui, 4வது தொனி, 热re, 4வது தொனி. 最热 zui re, என்பது மிகவும் வெப்பம்.

வாணி --最 zui, 4வது தொனி, 冷leng, 3வது தொனி. 最冷 zui leng, என்பது மிகவும் குளிர்.

க்ளீட்டஸ் --最 zui, 4வது தொனி, 冷leng, 3வது தொனி. 最冷 zui leng, என்பது மிகவும் குளிர்.

வாணி – 北京的冬天最冷。Bei jing de dong tian zui leng. பெய்சிங்கில் குளிர்காலம் மிகவும் குளிராக இருக்கின்றது. 北京的冬天最冷。Bei jing de dong tian zui leng.

க்ளீட்டஸ் --北京的冬天最冷。Bei jing de dong tian zui leng. பெய்சிங்கில் குளிர்காலம் மிகவும் குளிராக இருக்கின்றது.

வாணி – 夏天是一年中最热的季节。Xia tian shi yi nian zhong zui re de ji jie. கோடைக்காலம் ஆண்டில் மிகவும் வெப்பமான காலமாகும். 一年中, ஆண்டில். 季节, ji jie, பருவம். 夏天是一年中最热的季节。Xia tian shi yi nian zhong zui re de ji jie.

க்ளீட்டஸ் --夏天是一年中最热的季节。Xia tian shi yi nian zhong zui re de ji jie. கோடைக்காலம் ஆண்டில் மிகவும் வெப்பமான காலமாகும்.

வாணி – 北京的秋天天气最好。Bei jing de qiu tian tian qi zui hao. இலையுதிர் காலத்தில் பெய்சிங் வானிலை மிக சிறப்பாக இருக்கிறது. 北京的秋天天气最好。Bei jing de qiu tian tian qi zui hao.

க்ளீட்டஸ் --北京的秋天天气最好。Bei jing de qiu tian tian qi zui hao.

வாணி – கடந்த வாரம் உச்சரிப்பு பயிற்சியில் sh என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டோம். sh

க்ளீட்டஸ் – sh

வாணி – shi , 4வது தொனி. விளங்குதல் என்பதாகும். 我是中国人,Wo shi zhong guo ren. நான் சீனர். அதாவது நான் சீனராக இருக்கின்றேன்.

க்ளீட்டஸ் -- shi , 4வது தொனி. விளங்கு என்பதாகும். 我是中国人,Wo shi zhong guo ren. நான் சீனர்.

வாணி --我是印度人。 wo shi yin du ren. நான் இந்தியர்.

க்ளீட்டஸ் -- 我是印度人。 wo shi yin du ren. நான் இந்தியர்.

1 2