• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-02 16:50:10    
குவாங் சோ நகரில் வெளியூரிலிருந்து வந்தவரின் வீடு

cri

குவாங் சோ

சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங் சோ நகரம், சீனாவில் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்ட நகரங்களில் ஒன்றாகும். வேலை செய்யவும், வாழ்க்கை நடத்தவும், இந்நகரத்தின் அதிகமான வேலை வாய்ப்புகள், நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களை ஈர்த்து வருகின்றன. வெளியூரிலிருந்து வந்தவரை உள்ளூர் சமூகத்தில் பங்கேற்கச் செய்யும் வகையில், குவாங் சோ நகரம் சிறப்பு பண்பாட்டு மையத்தை உருவாக்கி, அவர்களுக்கு பல்வகை சேவைகளையும் பயிற்சிகளையும் வழங்குகிறது.

ஒவ்வொரு இரவும், குழந்தைகள் தங்களது தந்தையார் அல்லது தாய்மாருடன் இணைந்து, JIN YAN வீடாக அழைக்கப்பட்ட DA DONG JIE வீதி பண்பாட்டு மையத்துக்கு வந்து விளையாடுகின்றனர். அவர்களின் பெற்றோர், வேலைக்காக வெளியூரிலிருந்து குவாங் சோவுக்கு வந்தவர்களாவர். அவர்கள் DA DONG JIE வீதிக்கு அருகிலுள்ள வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

சே ஜியாங் மாநிலத்திலிருந்து வந்த ZHENG XIANG அம்மையார் ஒரு குழந்தையின் தாய். சில ஆண்டுகளுக்கு முன், வேலை செய்ய குவாங் சோவுக்குச் செல்வதென அவரது கணவர் முடிவு செய்தார். ஒரு வயதுக்குக் குறைவான குழந்தையை அழைத்துக் கொண்டு, அவர் தனது கணவருடன் இணைந்து குவாங் சோவுக்கு வந்தார். JIN YAN வீடு, தாமும் தனது குழந்தையும் மிக விரும்பிய இடமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

"இரவில் அனைவரும் இங்கே வந்து விளையாடுகின்றனர். இங்குள்ள சேவை நன்றாக உள்ளது. சில சமயத்தில் இம்மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில், குழந்தைகளை அழைத்துக் கொண்டு கலந்து கொள்ளலாம். எங்களுடன் நன்றாக பழகுகின்ற பணியாளர்கள் குடும்பத்தினர் போல் இருக்கின்றனர். அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே வித்தியாசம் இல்லை. இது நன்றாக உள்ளது என நாங்கள் உணர்கின்றோம்" என்றார் அவர்.

வசதிகள் முழுமையாக கொண்ட JIN YAN வீடு, உண்மையான பன்நோக்கு பொழுது போக்கு மையமாக இருக்கிறது என்று ZHENG XIANG அம்மையார் கூறினார்.

நகரங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் விவசாயிகள்

இம்மையத்தின் இரண்டாவது மாடியிலுள்ள குழந்தைகளின் விளையாட்டு அரங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது. கீழ் தளத்திலுள்ள இணையதளச் சேவை வழங்கப்படும் சிறு அறை அவர் மிகவும் விரும்பிய இடமாகும். வழவழப்பான sofa மற்றும் மென்மையான விளக்கு ஒளி கொண்ட இவ்வறையில் இரண்டு கணினிகள் மட்டுமே உள்ளன. இவ்வறைக்குள் நுழைந்ததும், வீடு திரும்பியதைப் போன்ற இன்பமான உணர்வு தனக்கு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

இப்பண்பாட்டு மையம் ஏன் JIN YAN வீடாக அழைக்கப்படுகிறது என்று எமது செய்தியாளர் கேட்ட போது, DA DONG JIE வீதி விவகார அலுவலகத்தின் துணைத் தலைவர் LI SUI MING விளக்கம் அளித்தார். சீன மொழியில் JIN YAN என்றால், வெளியூரிலிர்ந்து வந்தவர்கள் என்பது பொருள். JIN YAN வீடு, வெளியூரிலிருந்து வந்தவர்களின் குவாங் சோவிலுள்ள வீடாகும் என்று அவர் கூறினார்.

சேவை மூலம் குடியிருப்புப் பகுதிகளில் வெளியூரிலிருந்து வந்தவரின் மீதான மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். JIN YAN வீட்டைத் தவிர, JIN YAN பள்ளியும் நிறுவப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வந்தவரின் வாழ்க்கை மற்றும் வேலைத் திறனை உயர்த்தவும், சட்ட விதிகளைக் கடைப்பிடித்து குடியிருப்புப் பகுதிகளில் பங்கேற்க அவர்களுக்கு வழிகாட்டவும், இப்பள்ளி அடிக்கடி இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

JIN YAN திட்டப்பணி துவங்கியது முதல், பல்வகை கல்வி பயற்சியையும் பண்பாட்டு நிகழ்ச்சியையும் DA DONG JIE வீதி 30 முறைகளுக்கு மேலாக நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது. வெளியூரிலிர்ந்து வந்த குடியிருப்பு வாசிகள், இலவச நூல் படிப்பு, சட்ட ஆலோசனை, வேலை வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை அனுபவிக்கும் அதே வேளை, உடற்பயிற்சி வகுப்பிலும் தொழில் நுட்பப் பயிற்சியிலும் கலந்து கொள்ளலாம்.

"இத்திட்டப்பணியில், பல அம்சங்கள் உள்ளன. குடும்ப நலத் திட்டம், வேலை வாய்ப்பு, வாடகை வீட்டுக் கட்டுப்பாடு முதலிய அம்சங்களும் இதில் அடங்கும்" என்றார் LI SUI MING.

DA DONG JIE வீதி, குவாங் சோ நகராட்சி JIN YAN திட்டப்பணியைப் பரவலாக்கும் சோதனை இடங்களில் ஒன்றாகும். குவாங் சோ நகரின் பல்வேறு பகுதிகளிலும் JIN YAN வீடு போன்ற நிறுவனங்கள் அதிகம். வேலைக்காக வெளியூரிலிர்ந்து வந்தவரின் மீதான குவாங் சோ நகராட்சியின் மேலாண்மை, முறைமைமயமாக்கம், மனித இயல்பு மற்றும் சேவைத் திசையை நோக்கி மாறி வருகிறது. அத்துடன், வெளியூரிலிர்ந்து வந்தவரின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்கவும் உள்ளூர் அரசு பாடுபட்டு வருகிறது.