• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-02 17:06:57    
மடியினில் கணம்

cri

யுங்ஷோவில் வாழ்ந்த மிகப்பெரும்பாலானவர்கள் நீச்சலடிப்பதில் வல்லவர்கள். ஆற்றில் நீர் கரைபுரண்டோடினாலும் மீன் குஞ்சு போல் அழகாக நீச்சலடித்து கடந்து செல்லக்கூடிய ஆற்றலுள்ளவர்கள். ஒரு முறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. யுங்ஷோ மக்களுக்குத்தான் நீச்சல் தண்ணி பட்ட பாடாயிற்றே, எனவே அவர்களில் சிலர் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை பொருட்படுத்தாமல் ஒரு படகில் ஏறி மறு கரைக்கு செல்ல புறப்பட்டனர். ஆற்று நீரின் வலுவான ஓட்டத்தை சமாளித்து ஒரு வழியாக பாதியாற்றை கடந்த வேளையில், படகு கவிழ்ந்தது.

அதனால் என்ன, அவர்களுக்குத்தான் நன்றாக நீச்சல் தெரியுமே, எனவே ஆற்று நீரை எதிர்த்து மறுகரை நோக்கி நீச்சலடிக்கத் தொடங்கினர். இவர்களில் ஒருவன் மட்டும் கொஞ்சம் அசமந்தமாக, மிக குறைவான வேகத்தில் கைகளையும் கால்களையும் அசைத்து நீச்சலடித்துக் கொண்டிருந்தான். அவனை கண்ட அவனது சகாக்கள், என்னப்பா இது, எங்கள் அனைவரையும் விட சிறப்பாக நீச்சலடிக்கக் கூடியவன் நீதான், ஆனால் ஏன் பின் தங்கியுள்ளாய் என்று கேட்டனர். அவன் அதற்கு நான் ஆயிரம் காசுகளை முடிந்து என் கச்சையில் கட்டி வைத்துள்ளேன் அதான் கொஞ்சம் பாரத்துடன் நீச்சலடிக்க வேன்டியுள்ளது என்றான்.

அவனது சகாக்கள், அட ஏனப்ப அதை சுமந்தபடி கஷடப்பட்டு நீச்சலடிக்கிறாய், அதை தண்ணீரில் கழட்டி எறியவேன்டியதுதானே என்றனர்.

அதற்கு அவன் எந்த பதிலும் கூறாமல், தனது தலையை மட்டும் இல்லை என்பது போல அசைத்துவிட்டு, போராடிக்கொண்டிருந்தான். அவனது சகாக்கள் ஒருவழியாக மறுகரையை அடைந்தனர். நன்பன் இன்னும் கரை சேர முடியாமல் போராடுவதைக் கண்ட அவர்கள், அட மூடனே, உன் காசுகளை விட்டெறிந்து முதலில் ஒழுங்காக நீந்தி கரை சேரப்பார். நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது உன் காசால் என்ன பயன் என்று கத்தினர்.

அதற்கு தண்ணீரில் மடியில் கணத்தோடு நீந்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த அவன், மீண்டும் முடியாது என்பது போல தலையசைத்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சோர்ந்து, மடியின் கணம் அவனை அழுத்த, கைதேர்ந்த நீச்சல் திறன் கொண்டவனாயிருந்து, வைத்திருந்த காசை இழக்க மனமின்றி நீரில் மூழ்கி உயிரை இழந்தான் அந்த புத்திசாலி.